கோடைக்காலம் மற்றும் பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென மின்வாரிய தலைமைப் பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது மார்ச் மாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், மே, ஜூன் மாதங்களில் இருப்பதை போலவே, நாட்டின் பல இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. தமிழ்நாட்டில் தற்போதே பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. பொதுவாக பனி காலத்தை தொடர்ந்து கோடைகாலம் துவங்கும். இதனால், வாட்டி வதைத்த குளிரில் இருந்து சில நாட்கள் மிதமான வெப்பநிலையில் இருக்கலாம்.
ஆனால், படிப்படியாக வெயில் அதிகரிப்பதால் டிஹைட்ரேஷன், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், பாக்டீரியா தொற்று, ஹீட் ஸ்ட்ரோக் போன்ற பல உடல்நலப் பாதிப்புகளை சந்திக்கக் கூடும். எனவே, கோடைகாலம் துவங்கி விட்டாலே உடல் ஆரோக்கியத்தை முறையாக பராமரிக்க வேண்டும். இதற்கிடையே கோடை வெயில் சமாளிக்க இப்போதே பலர் ஏசி உள்ளிட்ட குளிர்சாதனங்களை வாங்க தொடங்கி விட்டனர். இன்னும் சிலர், கோடை காலத்தில் வாங்கினால் விலை அதிகமாக இருக்கும் என எண்ணி, முன்கூட்டியே ஏசியை வாங்கி வைத்துவிட்டனர்.
மேலும், கோடை காலத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் உடனே மின்வாரிய அலுவலகத்துக்கு மக்கள் ஃபோன் செய்துவிடுவார்கள். அந்த அளவுக்கு வெயில் தாக்கம் கொடூரமாக இருக்கும். இந்நிலையில் தான், தமிழ்நாடு முழுவதும் ஒரு முக்கிய உத்தரவை மின்சார வாரியம் பிறப்பித்துள்ளது.
அதாவது, கோடைக்காலம் மற்றும் பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென மின்வாரிய தலைமைப் பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மின்தடை ஏற்படும் பட்சத்தில் உடனே சரி செய்ய வேண்டும் என்றும், அவசர காலத்திற்கு ஏற்ப உபகரணங்கள், ஊழியர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.