fbpx

சத்தமே இல்லாமல் சம்பவம் செய்யும் சீமான்..!! லிஸ்ட் ரெடி..!! இனி தூக்க வேண்டியதுதான்..!! கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி..!!

Seeman | தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்தே களமிறங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் 20 பெண்கள், 20 ஆண்கள் களமிறக்கப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தான்.

இந்நிலையில் தான், மக்களவைத் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய கட்சி நிர்வாகிகளின் பட்டியலை திமுக, அதிமுக போல் நாம் தமிழர் கட்சியும் சத்தமின்றி தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், ரகசியக் குழுக்கள் மூலமாக களத்தில் இருந்து ரிப்போர்ட் ஒன்றையும் சீமான் எடுத்துள்ளார். அதில், நாம் தமிழர் கட்சியின் அமைப்பு முறையிலேயே ஒருசில மாற்றங்கள் கட்டாயம் கொண்டு வர வேண்டியுள்ளதை அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Read More : வெறும் 2 மாவட்டங்களை கொண்ட இந்திய மாநிலம் எது தெரியுமா..? பலருக்கும் இது தெரியாது..!!

Chella

Next Post

BREAKING | ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு..? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Mon May 20 , 2024
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அஜர்பைஜானின் ஜோல்ஃபா என்ற இடத்தில் அடந்த வனம் மற்றும் மலைப்பகுதியில் சுமார் 17 மணி நேரம் கழித்து உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அஜர்பைஜானில் இருந்து திரும்பும் போது மோசமான வானிலை காரணமாக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் “கடின தரையிறக்கம்” செய்ய […]

You May Like