fbpx

சீசன் தொடங்கியாச்சு!… தினமும் காலையில் கம்பங்கஞ்சி குடியுங்கள்!… வெரைட்டி ரெசிபி இதோ!…

கோடை சீசனில் தினமும் காலையில் சாப்பாட்டிற்கு பதிலாக கம்பங்கஞ்சி குடித்தால் உடல் புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

சீசன் நேரத்தில் கிடைக்கும் பழங்கள் மற்றும் சத்தான உணவுகளைச் சாப்பிடுவது, அதிகபட்ச சுவை, ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தைப் பெறச் சிறந்த வழியாகும். தற்போது கோடைக் காலம் தொடங்கியுள்ளதால், புத்துணர்ச்சியூட்டும் உணவு வகைகளை தவறவிடாதீர்கள். அந்தவகையில் காலை உணவுகளை எடுத்துக்கொள்வதில் மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும். சிலர் காலை நேரங்களில் சாப்பிடாமலேயே இருப்பதால் அவர்களுக்கு நாள்முழுவதும் சோர்வாகவே காணப்படுவர். இது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். கோடைக்கால வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க பல்வேறு ஆரோக்கிமான பழங்கள் மற்றும் பானங்களை அருந்துவோம். அந்தவகையில் தினமும் காலை நேரத்தில் சாப்பாட்டிற்கு பதிலாக கம்பங்கஞ்சி குடித்தால் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும் இதனை அருந்துவதால் ஏற்படும் நன்மைகளையும் இதில் பார்க்கலாம்.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும். மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர்.

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கவும் கம்பங்கஞ்சி உதவுகிறது. சிறுநீரைப் பெருக்கவும், நரம்புகளுக்கு புத்துணர்வையும் கொடுக்கும்.

கம்பங்கூழ் செய்ய தேவையான பொருட்கள்: கம்பு ஊறவைத்து – அரை கப், கேரட் – 2, பீன்ஸ் – 50 கிராம், காலிஃப்ளவர் – ஒரன்று சிறியது, பட்டை – 2, ஏலக்காய் – 4, கிராம்பு – 1, பிரியாணி இலை – 1, நல்லெண்ணெய் – 3 ஸ்பூன், பூண்டு – 5 பல், கடுகு – அரை ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன், எலுமிச்சை பழம் – பாதி அளவு, உப்பு – 2 ஸ்பூன்.

செய்முறை: முதலில் கம்பினை நன்றாக சுத்தம் செய்து, ஊற வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு ஊறவைத்த கம்பை குக்கரில் சேர்த்து அதோடு மேலே கூறப்பட்டுள்ள காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து, அதோடு இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து, அவற்றுடன் மிளகு, சீரகம், ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, இரண்டு விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.குக்கரில் பிரஷர் குறைந்ததும், காய்கறிகளில் சேர்ந்துள்ள பிரியாணி இலையை மட்டும் தனியாக எடுத்துவிட்டு, மற்ற பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். – Advertisement – பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் 5 பல் பூண்டு சேர்த்து அவை புரிந்ததும் அதனுடன் அரைத்து வைத்துள்ள கஞ்சை சேர்த்துக் கொள்ள வேண்டும் இவை நன்றாக கொதித்தவுடன் இவற்றில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான கம்பு வெஜிடபிள் கஞ்சி தயார் ஆகிவிடும்.

Kokila

Next Post

ஐஸ் வாட்டர் வேண்டாம்!... வெயிலுக்கு இதமான மண்பானை தண்ணீர்!... உடலுக்கு இத்தனை நன்மைகளா?...

Sun Mar 19 , 2023
குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட குளிர்ந்த நீரை அருந்தும் போது சில பின்விளைவுகள் ஏற்படும். மண் பானை நீர் எந்த பக்கவிளைவுகளுமற்றது. இந்த நீரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம். முன்னோர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறைகளை கடைபிடித்தாலே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால், அந்தகால உணவு முறைகள் முழுவதும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்திருந்தது. இதனால், முன்னோர்கள் நீண்டகாலம் ஆரோக்கியதுடனும், முதுமையிலும் நல்ல ஆயுளை கொண்டிருந்தனர். சாப்பாடு செய்வது முதல் தண்ணீர் குடிப்பது, […]

You May Like