fbpx

கமல்-ஐ பற்றி கௌதமிக்கு மட்டும் தெரிந்த இரகசியம்.!

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளிவந்த குரு சிஷ்யன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கௌதமி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களிடம் இணைந்து நடித்துள்ளார்.கமலுடன் பாபநாசம் படத்திற்கு பிறகு கௌதமி தற்பொழுது துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

சந்திப் பாட்டியா என்னும் தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து, அடுத்த ஆண்டே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விவாகரத்து செய்தார். 2004ம் ஆண்டு கமல்ஹாசனுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த அவர் 2016ம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.

விஸ்வரூபம் பிரச்சனை குறித்த தகவல்கள் கமலை வந்தடையும் போது கௌதமி அவர் அருகில் இருந்தார். பிரச்சனைகள் குறித்த கோவத்தில் தனது அறைக்கு சென்று படுத்து உறங்கி விடுவேன் என கூறியுள்ளார். கமல் தனக்கு அதிக பிரச்சனையும், குழப்பமும், கோபமும் வரும் பொழுது உடனே அறைக்குள் சென்று தூங்கி விடுவார். இந்த விஷயம் கௌதமிக்கு மட்டும் தான் தெரியும் என கமல் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

Maha

Next Post

ஆகஸ்ட் 14ஆம் தேதி மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும்..

Thu Aug 10 , 2023
சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் முதலமைச்சர்களின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி வரும் காலங்களில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அஅரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி […]

You May Like