fbpx

தானியங்கி-ஆக இயங்கும் டெஸ்லா, எங்க போகணும்னு சொன்னா மட்டும் போதும்..!

மின்சார வாகன தயாரிப்புக்கு பெயர்பெற்ற அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் கார் உற்பத்தியை தொடங்க இருப்பதாக அந்நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். விலை உயர்ந்த டெஸ்லா மின்சார வாகனத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. சொகுசு என்ற சொல்லுக்கு ஏற்றார் போல், ஆட்டோ பைலட் முறையில் செல்லும் இடத்தின் விவரத்தை பதிவிட்டால் போதும், டெஸ்லா கார் தானியங்கியாக செயல்பட்டு நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லும். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏதுவாக எதிர்காலத்தில் எரிபொருள் சொகுசுக் காருக்கு இணையாக, சுயமாக வாகனங்களை இயக்கும் வசதியும் கொண்டுவரப்பட இருக்கிறது. சிறிது நேரத்திலேயே Charge ஆகிவிடும் டெஸ்லா காரை, ஒரு முறை charge செய்தால் போதும், தொலைதூரம் பயணம் மேற்கொள்ளலாம்.

மற்ற கார்களை விட அதிகமான Air bags டெஸ்லா காரில் உண்டு. கால நிலைக்கு ஏற்றார் போல் காரின் உள்ளே நிலவும் சூழலும் தானாகவே மாறிவிடும்… இத்தனை சிறப்பு அம்சங்கள் கொண்ட டெஸ்லா கார் தமிழகத்தில் வர அதிக வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பாக சென்னையில் ஆட்டோமொபைல் உபகரணங்கள் வலுவாக இருப்பதால் டெஸ்லா நிறுவனம் காலூன்ற சாதகமாக இருக்கும். அனைத்து சொகுசு வசதிகளுடன் இந்தியாவில் மின்சார வாகனம் தயாரிக்க கார் ஒன்றுக்கு 20 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்படுகிறது. இந்திய மக்களின் பொருளாதார நிலை மற்றும் வாங்கும் திறனுக்கு ஏற்ப மின்சார வாகனங்களை டெஸ்லா தாயரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Maha

Next Post

பத்திரிகையாளரை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு - வெள்ளை மாளிகை கண்டனம்

Tue Jun 27 , 2023
பிரதமா் மோடியிடம் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக் கேட்ட அந்த கேள்வி – இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகவும், அரசை விமா்சிப்பவா்களை வாய் திறக்காமல் செய்வதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. உங்கள் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்தவும், பேச்சுரிமையை நிலைநாட்டவும் நீங்களும் உங்கள் அரசாங்கமும் என்ன நடவடிக்கையை எடுக்க விரும்புகிறீா்கள்? என்பது. அவரது கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, ”எனக்கு நீங்கள் […]
பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பெண் நிருபர்..!! வந்தது புதிய சிக்கல்..!! அப்படி என்ன கேட்டார் தெரியுமா..?

You May Like