fbpx

முதலிரவில் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! மனைவி கர்ப்பமாக இருந்ததால் பரபரப்பு..!! நடந்தது என்ன..?

ஒருவர் தனது வாழ்வில் முக்கிய நிகழ்வாக பார்ப்பது திருமணம்தான். திருமணம் முடிந்த கையோடு குடும்பத்தார் மிகுந்த உற்சாகத்துடன் புதுமணத் தம்பதிக்கு முதலிரவு ஏற்பாடு செய்து தருவது நம் நாட்டில் வழக்கமாக உள்ளது. அத்தகைய மகிழ்ச்சியான தருணம் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு புது மாப்பிள்ளைக்கு துயரமாக மாறியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் ஷிவ்புரியைச் சேர்ந்த ஒரு நபருக்கு அண்மையில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் முதலிரவு அன்று தம்பதி தனிமையில் இருந்த போது, மணமகன் மணப்பெண்ணின் வயிற்றுப் பகுதியில் 7-8 தையல் போடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது ஏன் ஏற்பட்டது என காரணம் என்று கேட்டுள்ளார். முதலில் மனைவி அதற்கு மழுப்பலான பதில் அளித்துள்ளார். சந்தேகம் வலுக்கவே, தீவிரமாக கேட்டதில் அவருக்கு அதிர்ச்சி உண்மை அம்பலமானது.

மனைவி ஏற்கனவே ஒருவரை காதலித்துள்ளார். அந்த நபர் மூலம் பெண் கர்ப்பமான நிலையில், 3 மாதத்திற்குப் பின்னர் அறுவை சிகிச்சை மூலம் கருவை கலைத்துள்ளார். இந்த உண்மைகளை பெண் வீட்டார் மறைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இது தொடர்பான தகவல்களை மருத்துவமனைக்கு சென்று அந்த மணமகன் உறுதிப்படுத்திய நிலையில், ஆத்திரத்தில் மனைவியை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்குள்ளாக, அந்த பெண்ணின் வீட்டார் கணவர் மீது எதிர் வழக்கு தொடர்ந்து ஜீவனாம்சம் கோரியுள்ளனர். இந்த விவகாரத்தில் தனக்கு நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என அந்த நபர் கோரிக்கை வைத்துள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்வு..!! அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Tue Apr 18 , 2023
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமூக நலத்துறை, மகளிர் உரிமைத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார். அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% ஒதுக்கீடு வழங்கப்படும் என்றார். இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். […]

You May Like