fbpx

சிக்னல் வந்தாச்சு..!! தமிழகத்தை குளிர்விக்க போகும் மழை..!! கனமழையும் இருக்காம்..!! இன்று முதல் ஆரம்பம்..!!

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையில், தற்போது வேலூர் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்து வருவது நல்ல அறிகுறி எனவும், இன்னும் வரும் நாட்களில் இடியுடன் கூடிய கனமழை உள் தமிழகத்தில் பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதுமே கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் வெப்ப அலை தமிழகத்தில் மிக அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிகாலை நேரங்களிலேயே வீட்டில் தங்கி இருக்கும் மக்கள் புழுக்கத்தை உணர முடிகிறது. மேலும், காலை 7 மணியிலிருந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிடுகிறது. இதனால் முதியவர்கள், பச்சிளம் குழந்தைகள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசி வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகி வருகிறது. அதுமட்டுமின்றி 4, 5, 6 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீச கூடும் எனவும் இன்று முதல் 6ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பகல் நேரங்களில் கடுமையான வெயில் கொளுத்தி வரும் நிலையில், மக்கள் வெளியே வர தயங்குகின்றனர். இந்நிலையில் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதேபோல தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் உள்ளிட்டோரும், தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் மழை பெய்யும் அது இடியுடன் கூடிய கனமழையாக இருக்கும் எனக் கூறியிருந்தனர்.

அதை மெய்ப்பிக்கும் விதமாக நேற்று வேலூர் – சித்தூர் பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக பல்வேறு காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டிகளுடன் மழை பெய்தது பொதுமக்களை மகிழ்ச்சி அடையச் செய்தது. இது மட்டுமில்லாமல் தென்மேற்கு பகுதிகளில் அதாவது கன்னியாகுமரி தொடங்கி தென்காசி, தேனி பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டை பொறுத்தவரை இன்று முதல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஏற்கனவே கணித்தபடி தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என தனியார் வானிலை மைய ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் உறுதி செய்துள்ளார். அதாவது வேலூர் பகுதிகளில் இடியுடன் பெய்த கனமழை சாம்பிள் தான் எனவும் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் இனி அதிகமான கனமழை இருக்கும் எனவும் அது இடியுடன் கூடிய கனமழையாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல், தற்போது வெப்பம் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய தென் தீபகற்பம் அதிக வெப்பம் அடைந்திருப்பதாகவும் இதன் காரணமாக ராஜஸ்தான் பகுதிகளில் ஏற்படும் தாழ்வு நிலையால் பருவக்காற்று வீசி நிச்சயம் பெரிய அளவில் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் 6ஆம் தேதிக்குள் தமிழகத்தில் கனமழையை எதிர்பார்க்கலாம் என்கின்றனர் தனியார் வானிலை ஆய்வாளர்கள்.

Read More : குணா குகை பிளான் திடீர் ரத்து..!! அவசர அவசரமாக இன்றே சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்..!!

Chella

Next Post

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

Fri May 3 , 2024
தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தபால் துறையில் தற்போது ஸ்டாப் கார் டிரைவர் (Staff Car Driver) பணிக்கு 27 காலியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் கர்நாடகாவில் பணியமர்த்தப்படுவார்கள். பெங்களூருவில் 15 பேர், மைசூரில் 3 பேர் , மற்றவர்கள் சிக்கோடு, கலபுரி, ஹாவேரி, கார்வார், மண்டியா, புத்தூர், சிவமொக்கா, உடுப்பி, கோலார் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். வயது வரம்பு: விண்ணப்பதாரர் 18 […]

You May Like