fbpx

3 கிராமி விருதுகளை தட்டித்தூக்கிய பாடகரை கையோடு தூக்கிச் சென்ற போலீஸ்..!! பெரும் பரபரப்பு..!!

3 கிராமி விருதுகளைப் பெற்ற கையோடு பாடகர் கில்லர் மைக்கை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இசைத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படுபவை கிராமி விருதுகள். நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் 66-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உலகம் முழுவதும் இருந்தும் பல்வேறு இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர். இதில் சங்கர் மகாதேவன், செல்வகணேஷ், கணேஷ் ராஜகோபாலன், ஜாகிர் உசேன் ஆகியோர் இணைந்து உருவாக்கிய சக்தி என்ற ஆல்பத்திற்கு விருது கிடைத்தது.

இந்த விழாவில் அட்லாண்டாவைச் சேர்ந்த பிரபல இசைக் கலைஞரான கில்லர் மைக்கிற்கு 3 கிராமி விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால், விருது பெற்ற கையோடு அங்கிருந்த சிலரிடம் தகாத முறையில் நடந்து கொண்டு வாக்குவாதம் செய்தார். இதனால், அவரை அங்கிருந்த போலீசார் அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர். ஆனால், கைதான சில மணி நேரத்திலேயே விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

நடிகர் விஜய் கட்சியின் தேர்தல் சின்னம் என்ன தெரியுமா..? தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைப்பு..?

Mon Feb 5 , 2024
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக கட்சியின் தேர்தல் சின்னம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். விஜயின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஜய், கட்சியின் கொடியை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கொடியின் நிறம் மற்றும் கொள்கைகளை விளக்கும் வகையில் கொடி வடிவமைக்கப்படுகிறது. கட்சியின் சின்னம் பற்றி கட்சி தலைவர் […]

You May Like