fbpx

டெல்லியில் கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தாவின் மண்டை ஓடு மீட்பு… பரபரப்பு…

டெல்லியில் காதலனால் கொல்லப்பட்டு 35 கூறுகளாக்கி வனப்பகுதியில் உடல்பாகங்களை வீசிய நிலையில் போலீசார் மண்டை ஓடு ஒன்றை மீட்டுள்ளனர்.

மும்பையைச் சேர்ந்தவர் அப்தாப்-ஷ்ரத்தா இருவரும் டேட்டிங் செயலியில் சந்தித்து பேசி, பழகி பின்னர் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். இவர்களின் காதலுக்கு ஷ்ரத்தாவின் பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதனால் பெற்றோரை எதிர்த்து இமாச்சல் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்றுவிட்டு இறுதியாக டெல்லிக்கு வந்துள்ளனர். இருவரும் ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது.

இந்நிலையில் ஷரத்தா தன்னை திருமணம் செய்து கொள் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அப்தாப் கொலை செய்து காதலியின் உடலை கறி வெட்டும் கத்தியால் 35 கூறுகளாக்கியுள்ளான். இதை பதப்படுத்துவதற்கு 300 லிட்டர் ஃப்ரிட்ஜ் வாங்கியுள்ளான். காதலியின் உடல் பதப்படுத்தி ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும்போதே குடி, போதை என இருந்த அப்தாப் வேறொரு பெண்ணை அறைக்கு அழைத்து வந்துள்ளார்.

இதனிடையே யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க ஷ்ரத்தாவின் இன்ஸ்டா அக்கவுண்டை ஆக்டிவாக வைத்துள்ளார். பெற்றோரை எதிர்த்துக்கொண்டு வந்திருந்தாலும் ஷ்ரத்தா எப்போதாவது தன் தந்தையிடம் பேசுவதாக கூறப்படுகின்றது. 6 மாதமாக எந்த தகவலும் இல்லை என்பதால் டெல்லியில் உள்ள வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். ஷ்ரத்தா வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனால் ஷ்ரத்தாவின் தந்தை தன் மகள் காதலித்த அப்தாப் பற்றி கூறியுள்ளார். கடந்த 6 மாதமாக அவளை காணவில்லை என தெரிவித்து ஒரு புகார்அளித்துள்ளார். இதனால் சந்தேகத்தின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்தாப்பிடம் விசாரித்தனர். கிட்டத்தட்ட 4 முறைக்கு மேல் போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை நடத்தியதில் கொலை நடந்த சம்பவத்தை பற்றி ஒரு இம்மி அளவு கூட கசியவிடவில்லை.அவ்வளவு சாமர்த்தியமாக காய் நகர்த்தியுள்ளான்.

இதனிடையே 5 வது முறை போலீசார் அழைத்து விசாரணை மேற்கொண்டதில் வேறு வழியின்றி சில விஷங்களை உளறிவிட்டான். இதை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரித்ததில் கொலை செய்து மெஹ்ரவுலி வனப்பகுதியில் துண்டுகளை வீசியதாக தெரிவித்தான். அவனை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று உடல் பாகங்களை போலீசார் மீட்டனர். இன்று கர்கி குளத்தில் உடல் பாகங்கள் சிலவற்றை வீசியதாக கூறியுள்ளான். எனவே குளத்தில் நீரை வெளியேற்றிவிட்டு உடல்பாகங்களை தேடினர். மண்டை ஓடு கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

எனினும் போலீசிடம் ஆட்டம் காட்டும் அப்தாப் தனது வாக்குமூலத்தை மாற்றிக்கொண்டே இருப்பதால் உண்மைகண்டறியும் சோதனையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். நீதிமன்றமும் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த வார இறுதிக்குள் இந்த சோதனை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஷ்ரத்தாவை கொடூரமாக கொன்ற காதலனுக்கு கிடைக்கும் தண்டனை இனி எந்த பெண்ணுக்கும் இப்படி கொடூரம் நடக்க கூடாது என பொதுமக்கள் கருத்து தெரவித்து வருகின்றனர்.

Next Post

அண்ணாமலை ஆரம்பத்திலிருந்தே என்னை வெளியேற்ற கங்கணம் கட்டிக்கொண்டார்- காயத்ரி ரகுராம்…!!

Tue Nov 22 , 2022
பா.ஜ.க. தமிழகத்தின் மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே என்னை கட்சியிலிருந்து வெளியேற்ற கங்கணம் கட்டிக்கொண்டார் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக உள்ள காயத்ரி ரகுராம் அழைக்கப்படவில்லை. இதனால் உள்கட்சி மோதல் வெடித்தது. நேற்று காயத்ரி ரகுராம் டுவிட்டர் பதிவுகளை அடுக்கடுக்காக அடுக்கினார். இதில் சிலவற்றை உளறிக்கொட்டினார். இந்நிலையில் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து […]

You May Like