fbpx

மழை பெய்ய தயாரான வானம்..!! திடீரென தோன்றிய வெள்ளை நிற வட்டம்..!! வியந்து பார்த்த மக்கள்..!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மாலை முதல் இரவு வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 10.30 மணிக்கு மேற்கு பகுதியில் திடீரென்று வானில் வெள்ளை நிற மிகப் பெரிய வட்டம் தோன்றியதால், அதன் அருகில் இருந்த நிலா கூட சிறியதாக தெரிந்தது. இதனை பொதுமக்கள் அச்சம் கலந்த அதிசயமாக பார்த்து ரசித்தனர். இந்த நிகழ்வு ஏன் தோன்றியது? எதற்காக தோன்றியது? என்று பொதுமக்களுக்கு குழப்பம் எழுந்துள்ளது.

மேலும், இதுகுறித்து வானிலை ஆராய்ச்சி சார்ந்த அதிகாரிகள் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று திருத்தணி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நள்ளிரவில் வானத்தில் தோன்றிய வெள்ளை நிற வட்டம் பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

சாலையில் சென்றவரை தடுத்து நிறுத்தி ரூ.500-க்கு அழைத்த வாலிபர்..!! கன்னியாகுமரியில் பரபர சம்பவம்..!!

Thu May 4 , 2023
கன்னியாகுமரி மாவட்டம் சுண்டன்பரப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (36). இவர் சுவாமிநாதபுரம் பகுதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அவரை வாலிபர் ஒருவர் வழிமறித்து நைசாக பேச்சு கொடுத்தார். பின்னர், தனது வீட்டில் அழகான இளம்பெண்கள் இருப்பதாகவும், ரூ.500 கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத செந்தில்குமார், அதிர்ச்சியடைந்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குறிப்பிட்ட வீட்டிற்குள் அதிரடியாக […]

You May Like