fbpx

’தூங்கிக் கொண்டிருக்கும் அரசாங்கம் துரிதமாக செயல்பட வேண்டும்’..! திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி..!

இனியாவது தூங்கிக் கொண்டிருக்கும் அரசாங்கம் துரிதமாக செயல்பட்டு வீணாக கடலில்
கலந்து கொண்டு வரும் உபரிநீரை விவசாயிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க
வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், ”வேளாண் மக்கள் இதுபோன்ற மாநாடு மூலம் தான் அடையாளம் காணப்படுகின்றனர். விவசாயிகளை வாழவைக்கும் மாநாடு இது. மாநாட்டில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளில், வெளிநாடு இறக்குமதிக்கு மானியம் தருவதை நிறுத்தி, சுதேசி பொருட்களுக்கு மானியம் வழங்க வேண்டும். எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முக்கியமானவை.

’தூங்கிக் கொண்டிருக்கும் அரசாங்கம் துரிதமாக செயல்பட வேண்டும்’..! திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி..!

விவசாயத்துக்கு உயிராக இருப்பது தண்ணீர். நீர் மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துவதற்காக ஏரி, குளம் உள்ளிட்டவைகள் தூர்வார குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. ஏரி, குளங்களில் இருந்து அள்ளப்படும் மண் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இலவசமாக கொடுக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 600 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு தூர்வாரப்பட்டதால் பருவமழை காலங்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் ஏரியில் தேக்கினோம். விவசாயிகளுக்கு பிரச்சனை எழும் போதெல்லாம் ஓடோடி உதவிய கட்சி அதிமுக தான். மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் கடலில் கலக்கிறது. ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டி அதன்மூலம் தண்ணீர் சேமித்து கோடைகாலத்தில் தண்ணீர் பயன்படுத்தலாம் என்று தான் உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை கொண்டு வந்தோம்.

’தூங்கிக் கொண்டிருக்கும் அரசாங்கம் துரிதமாக செயல்பட வேண்டும்’..! திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி..!

இதற்காக சேலம் மாவட்டத்தில் வறண்ட 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் தீட்டப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஆமை வேகத்தில் இந்த திட்டம் நடைபெறுகிறது. நீரேற்று திட்டத்தின் மூலமாக 100 ஏரிகள் நிரப்பி இருந்தால் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றிருக்கும். நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கும். இந்த அரசாங்கம் ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகிறது. இனியாவது தூங்கிக் கொண்டிருக்கும் அரசாங்கம் துரிதமாக செயல்பட்டு வீணாக கடலில்
கலந்து கொண்டு வரும் உபரிநீரை விவசாயிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க
வேண்டும்”. இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

தனிநபர் கடன் வீடு வாகனங்களுக்கான வட்டி விகிதம் மேலும் உயர வாய்ப்பு..ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பு..!

Fri Aug 5 , 2022
ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன் ரெப்போ ரேட்டின் வட்டி விகிதத்தில் 0.5 சதவீதம் அதிகரிக்க போவதாக இன்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி 4.9 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால், வங்கிகளில் வாங்கப்படும் வீட்டுக்கடன் மற்றும் வாகனம், தனிநபர் கடன்களின் வட்டி விகிதங்கள் அதிகரிக்கிறது. மேலும், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் வாங்கும் போது இனி […]
வாடகை வசூலிக்க வீட்டு உரிமையாளர்களுக்கு தடை..! சட்டப்பேரவையில் வெளியான முக்கிய அறிவிப்பு..!

You May Like