fbpx

உணர்ச்சிகளுக்கு ஏற்ப வியர்வை வாசனை மாறும்!… வயது அதிகரிக்க அதிகரிக்க வியர்வை குறையும்!… அதிசய தகவல்கள்!

நம்முடைய மனதில் ஏற்படும் வெவ்வேறு உணர்ச்சிகளுக்கு ஏற்ப வியர்வையின் வாசனை மாறும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வியர்வை என்பது உங்களுடைய தோலில் உள்ள மில்லியன் கணக்கான சுரப்பிகள் சுரக்கும் தண்ணீரும், உப்பும் சேர்ந்த கலவை. வியர்வை சுமார் 99 சதவீதம் தண்ணீரால் ஆனது. நம் ஒவ்வொருவருடைய உடல் முழுவதும் 20 லட்சத்தில் இருந்து 50 லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு அதிக வியர்வை சுரப்பிகள் உள்ளது. ஆனால் ஆண்களின் வியர்வை சுரப்பிகள் பெண்களை விட அதிக வியர்வையை உற்பத்தி செய்கிறது. உங்களுக்கு வயது அதிகரிக்கும் பொழுது உங்களுக்கு வியர்வை குறைவாக வரும். இதற்கு காரணம் உங்களுடைய வியர்வை சுரப்பிகள் சுருங்கி காலப்போக்கில் உணர் திறன் குறைவாக இருப்பதுதான். வியர்வை என்பது நம்முடைய கைரேகையைப் போன்றது. அதாவது தனித்தன்மை வாய்ந்தது. ஒவ்வொருவருடைய வியர்வையின் கலவையும் வித்தியாசமாக இருக்கும்.

நம்முடைய வியர்வை மணமற்றது, நிறமற்றது. அப்படி என்றால் ஏன் வியர்வை நாற்றம் அடிக்கிறது என நீங்கள் கேட்கலாம். இதற்கு காரணம் உங்களுடைய தோலில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் உங்களுடைய தோலில் உள்ள ரசாயனங்கள். இவைகளுடன் எதிர்வினை புரியும் பொழுது வியர்வையில் கெட்ட வாசம் ஏற்படுகிறது. உடற்பயிற்சி செய்யும் பொழுது நம்முடைய நெற்றியில் இருந்தும் கைகளில் இருந்தும் வியர்வை வெளியேறும் பொழுது அதில் எந்த துர்நாற்றமும் இருக்காது. ஆனால் உங்களுடைய அக்குள் போன்ற இடங்களில் இருந்து வெளிவரும் வியர்வை துர்நாற்றமாக இருக்கும். இதற்கு காரணம் இந்த இடங்களில் உள்ள வியர்வை சுரப்பிகள் அபோக்ரைன் சுரப்பிகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த சுரப்பிகள் புரதம் நிறைந்த வியர்வையை வெளியிடுகிறது. இந்த வியர்வையை அந்த இடத்தில் வசிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகம் சாப்பிடுகிறது. பாக்டீரியா சேர்ந்து வெளிவரும் வியர்வை உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

வியர்வையோடு சேர்ந்து நம்முடைய உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிரிகளும் நம்முடைய உடலுக்கு நன்மையை செய்கிறது. அதாவது இவைகள் உங்களுடைய சருமத்தை ஆபத்தான நோய்க் கிருமிகளிடமிருந்து பாதுகாக்க உதவுகிறது. ஒரு சராசரி மனிதன் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 278 கேலன் வியர்வையை வெளியேற்றுகின்றான் என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வியர்வை பல நன்மைகளை நமக்கு கொடுக்கிறது. நம்முடைய உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. தேவைப்படும் பொழுது நம்முடைய உடலை வெப்பத்தில் இருந்து குளிர்விப்பது மட்டுமில்லாமல் வியர்வையில் டெர்ம்சிடின் எனப்படும் ஒரு ஆண்டிபயாடிக் பெப்டைட் உள்ளது. இது தோலில் பாக்டீரியா வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது.

நம்முடைய மனதில் ஏற்படும் வெவ்வேறு உணர்ச்சிகளுக்கு ஏற்ப வியர்வையின் வாசனை மாறும் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உங்களுக்கு வியர்வை சிவப்பு நிறத்தில் வந்தால் ஹெமாடோஹைட்ரோசிஸ் என்ற அரிய வகை வியர்வை நோய் உங்களுக்கு இருக்கிறது என அர்த்தம். இது இரத்த நாளங்கள் சிதைவதால் ரத்தம் வியர்வைச் சுரப்பிகளில் ஓடுவதால் ஏற்படுகிறது. இதனால் வியர்வையோடு சேர்ந்து இரத்தம் வரும். குரோமிட்ரோசிஸ் என்ற நோய் இருந்தால் ஆரஞ்சு, நீலம் மற்றும் பிற நிறங்களில் வியர்வை வெளியேறும். இது ஒரு சில நேரங்களில் ஒரு சில மருந்துகளை உட்கொள்வதன் மூலமாகவும் ஏற்படும்.

மனிதர்களை தவிர பெரும்பாலான விலங்குகளுக்கு வியர்ப்பது இல்லை. வித்தியாசமாக பசுக்களுக்கு மூக்கின் வழியாக வியர்வை வெளியே வருமாம். நீர் யானைகளுக்கு வித்தியாசமாக வியர்வை சிவப்பு நிறத்தில் வெளியேறும். இந்த வியர்வை நீர் யானையின் உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை கொல்லவும், சூரியனின் வெப்பத்திலிருந்து நீர் யானைகளை காப்பாற்றிக் கொள்ளவும் உதவுகிறது.

Kokila

Next Post

"நீ என் மனைவி இல்ல, என் தந்தையின் மனைவி" பெண் அளித்த பரபரப்பு புகார்..

Fri Sep 22 , 2023
உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் மீராப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிக்கந்தர்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் 20 வயதான தபசும். இவர் கடந்த 2022-ம் ஆண்டில் இஸ்திகார் என்பவரின் மகன் முதசீரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆனது முதல் இஸ்திகார் அவரது மருமகளான தபசுமை இச்சையான பார்வையோடு அணுகியுள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை 5-ம் தேதி, முதசீர் அவரது தாயை மீராப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த […]

You May Like