fbpx

காட்டுக்குள் சிறுமியின் அழுகுரல் சத்தம்..!! பலாத்காரம் செய்ய முயன்ற நபரை ஓட விட்ட குரங்குகள்..!! நெகிழ்ச்சி சம்பவம்..!!

சிறுமி ஒருவரை ஒரு நபர் வன்கொடுமை செய்ய முயன்றபோது சிறுமியை குரங்குகள் காப்பாற்றிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக நாடு முழுவதும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பல பகுதிகளிலும் பெண்கள், சிறுமிகள் வன்கொடுமை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும் மக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் ஒரு கொடூர நபரிடமிருந்து சிறுமியை குரங்குகள் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, உத்தரப்பிரதேசத்தில் 6 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் பலாத்காரம் செய்வதற்காக அங்குள்ள காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு சிறுமி அழுவதை கண்ட அங்கிருந்த குரங்குகள், அந்த நபரை கடித்து, அடித்து தாக்கத் தொடங்கியுள்ளன. இதனால் அந்த நபர் சிறுமியை அங்கிருந்து தப்பி வந்துள்ளார்.

பின்னர், வீட்டிற்கு ஓடி வந்த சிறுமி, அழுது கொண்டே தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அந்த அடையாளம் தெரியாத நபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. சிறுமியை குரங்குகள் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ’என்னுடைய திரை வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்’..!! ’இனி நடிக்க மாட்டேன்’..!! அதிரடியாக அறிவித்த பிரபல நடிகர்..!!

English Summary

A man tried to rape a girl and monkeys saved her.

Chella

Next Post

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு...! சென்னை ஐஐடி அறிமுகம் செய்த சான்றிதழ் படிப்பு...!

Mon Sep 23 , 2024
IIT Chennai has introduced online certificate courses for school students

You May Like