fbpx

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ஆதார விலை ரூ.3500..! வெளியான முக்கிய அறிக்கை..!

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ஆதார விலையாக ரூ.3,500 வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து அவர்கள் பயிர் காப்பீடு செய்திருந்தாலும், செய்யாவிட்டாலும், அவர்கள் அனைவருக்கும் உரிய இழப்பீட்டை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். இழப்பீடு கிடைத்தால்தான் விவசாயிகள் மேலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படாமல், மீண்டும் தாளடி பயிர் செய்ய ஏதுவாக இருக்கும். தற்போது தமிழக அரசு 2022-2023 ஆண்டிற்கான நெல்லுக்கு ஆதார விலையை அறிவித்துள்ளது. பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,115-ம், சன்னரகம் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,160-ம் அறிவித்துள்ளது. இந்த தொகை போதுமானதாக இல்லை.

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ஆதார விலை ரூ.3500..! வெளியான முக்கிய அறிக்கை..!

நடப்பாண்டில் நெல் உற்பத்தியின் செலவு ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,986 என்று கணக்கிடப்பட்டு உள்ளது. உற்பத்தி செலவை விட லாபம் ரூ.129 தான் அதிகம் என்றால் விவசாயிகளுக்கு எப்படி கட்டுப்படியாகும், அவர்களின் நிலை எவ்வாறு உயரும். நாட்டில் மற்ற துறைகளை விட விவசாயத்திற்கு மட்டும் தான் இந்த நிலை இருக்கிறது. ஆகவே தமிழக அரசு, நெல்லுக்கு அளிக்கும் ஊக்கத்தொகையை அதிகரித்து குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்கினால் தான் விவசாயிகளுக்கு ஆதாயமாக இருக்கும். அதோடு இதுவரை நஷ்ட கணக்கையே பார்த்து வந்த விவசாயிகள் லாப கணக்கை துவங்க முடியும். விவசாயமும் வளர்ச்சியடையும். எனவே மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்”. இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

Chella

Next Post

சென்னையில் டீசல் தட்டுப்பாடு..! பெட்ரோல் பங்க்குகளின் அறிவிப்பால் வாகன ஓட்டிகள் அதிருப்தி..!

Mon Sep 5 , 2022
சென்னையில் பல்வேறு பெட்ரோல் பங்க்குகளில் டீசல் கையிருப்பு இல்லை என்ற பலகைகளால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்டவை அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதனால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலை உயர்வை எதிர்கொண்டன. பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை […]
சென்னையில் டீசல் தட்டுப்பாடு..! பெட்ரோல் பங்க்குகளின் அறிவிப்பால் வாகன ஓட்டிகள் அதிருப்தி..!

You May Like