fbpx

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நெல்சன் மனைவிக்கு தொடர்பு..!! போலீசார் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஜூலை 5ஆம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு மூளையாக இருந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரைத் தவிர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 21 பேர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது தந்தை நாகேந்திரனையும் போலீசார் கைது செய்தனர். இதுமட்டுமல்லாமல், இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து, ஆந்திராவில் தலைமறைவாக இருந்த ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடியை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் தப்பியோடிய நிலையில் அவருக்கு அடைக்கலம் கொடுத்தார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நெல்சனின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அடுக்கட்டமாக நெல்சனிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Read more ; ’இந்த விஷயம் மட்டும் நடந்தால் உலகம் அழியுமாம்’..!! இப்படி ஒரு கோயிலா..? எங்கிருக்கு தெரியுமா..?

English Summary

The special forces police investigated the famous film director Nelson’s wife in connection with the Armstrong murder case.

Next Post

'துக்ளக்' பத்திரிகையின் ஆசிரியர் சோ ராமசாமியின் மனைவி காலமானார்..!!

Tue Aug 20 , 2024
பிரபல அரசியல் விமர்சகரும், துக்ளக் இதழ் ஆசிரியருமான சோ ராமசாமி. பகீரதன் என்பவர் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் தான் ஏற்ற கதாபாத்திரத்தின் ஒன்றின் பெயரான சோ என்பதையே தன் புனைப்பெயராக அவர் வைத்துக்கொண்டார். தன்னுடைய அங்கத எழுத்துகளுக்காகவும் அரசியல் விமர்சனங்களுக்காகவும் மிகவும் அறியப்பட்ட சோ, 1970ஆம் ஆண்டில் துக்ளக் வார இதழை துவங்கினார். அதன் பிறகு Pickwick என்ற ஆங்கில இதழையும் சில காலம் நடத்தினார். இவர் 2016ம் […]

You May Like