fbpx

கிராமத்தில் பிறந்து 8வது கூட தாண்டாத ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேச்சாளர்..யார் இந்த ருமாதேவி??

8வது கூட தாண்டாத ஒரு பின்தங்கிய கிராமத்தை சேர்ந்த பெண் கௌரவ டாக்டர் பட்டம் பெற்று, 30,000 பெண்களுக்கு திறன்மேம்பாடு பயிற்சி கொடுத்து, அமெரிக்கா, சிங்கப்பூர் என பல நாடுகளுக்கும் சென்று உரையாற்றி வருகிறார் என்று யாராவது கூறினால் நம்புவதற்கு கொஞ்சம் நீங்கள் சிரமப்படலாம். ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் 1988ம் ஆண்டு பிறந்து இன்று உலகின் முன்னணி பேஷன் டிசைனராக வலம் வரும் ருமா தேவி தான் இந்த பெருமைகளுக்கு சொந்தக்காரர்.

தன்னுடைய இளம் வயதிலேயே தாயை இழந்த இவர், தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் சொந்தங்களின் வளர்ப்பில் தள்ளப்பட்டார். மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால் 8ம் வகுப்போடு பள்ளியில் இருந்து நிறுத்தப்பட்டார். 17 வயதில் திருமணம் செய்து கொடுக்கவும் பட்டார்.

2006ம் ஆண்டு முதன்முதலில் தன்னுடைய கிராமத்தை சேர்ந்த 10 பெண்களை சேர்த்து கொண்டு ஒரு சிறிய சுயஉதவி குழுவை துவங்கினார் ருமா. ஆளுக்கு 100 ரூபாய் போட்டு நூல் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி தங்களது வியாபாரத்தை தொடங்கினர். முதலில் பேக், குஷன் போன்றவற்றை செய்து விற்பனையை நடத்தி வந்தனர். அவரது கிராமத்தில் செயல்பட்டு வந்த Gramin Vikas Evam Chetna Sansthan என்ற அமைப்பு ருமாவை தனது அமைப்பில் உறுப்பினராக சேர்த்து கொண்டது. பின்னாளில் அதே அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றார் ருமா.

ருமாவின் முதல் கைவினை கண்காட்சி 2010ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்றது. அதற்கு பிறகு 2016ம் ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்றது. படிப்படியாக உலக அளவில் தன்னுடைய கைவினை தொழிற் திறமை மற்றும் பேஷன் டிசைனிங் திறமையால் அங்கீகரிக்கப்பட்ட ருமா தற்போது 150 கிராமங்களுக்கும் மேல் உள்ள 30,000த்திற்கும் அதிகமான பெண்களுக்கு திறன்மேம்பாடு பயிற்சியை அளித்துள்ளார்.

2018ம் ஆண்டு ருமாவின் செயல்பாடுகளுக்காக மகாத்மா ஜோதி ராவ் புலே பல்கலைக்கழக்தின் மூலம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று இந்திய கைவினை தொழிலாளர்களின் பொருட்களை விளம்பரப்படுத்தி வருகிறார். தன்னுடைய பெயரில் ஒரு இணையதளத்தையும் நடத்தி வருகிறார் ருமா தேவி. அதன் மூலம் பல்வேறு கைவினை பொருட்களை விளம்பரப்படுத்தியும், விற்பனை செய்தும் வருகிறார்.

Maha

Next Post

தான் பெற்ற குழந்தைகள் மீதே கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றி கொடுமைப்படுத்திய கொடூர பெண்…..! எங்கு தெரியுமா……?

Wed Aug 2 , 2023
குழந்தைகளை எப்போதும் யார் துன்புறுத்தினாலும், குழந்தைகளின் தாய் மட்டும் எப்போதும் குழந்தைகள் துன்பப்பட வேண்டும் என்று நினைக்கவே மாட்டார். தன்னுடைய குழந்தைகளை யாராவது குறை சொன்னாலும் அதனை எந்த தாயும் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார் இதுதான் தாய்மையின் பண்பு. ஆனால் இதற்கு நேர் எதிர் மாறாக சிங்கப்பூர் நாட்டில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, குற்றம் சுமத்தப்பட்ட அந்தப் பெண் சென்ற வருடம் ஜூலை மாதம் இரண்டாம் […]

You May Like