Dengue: மீண்டும் டெங்கு பரவல் வேகமெடுத்துள்ளதையடுத்து, பெருவின் சில மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான பெருவில் நடப்பாண்டின் முதல் 7 வாரத்தில் 31,000 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இருமடங்கு அதிகம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, நாட்டின் மொத்தம் உள்ள 24 மாகாணங்களில் அதிகபட்சமாக 20 மாகாணங்களில் சுகாதார அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் மருத்துவ வசதிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் டெங்கு பாதிப்பு பெரு நாட்டின் சுகாதார கட்டமைப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்தவகையில், கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் 18 பேர் உயிரிழந்தனர். ஆனால் நடப்பாண்டில் தற்போதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஸ் எஜிப்தி வகை கொசுக்களால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. குறிப்பாக பெருவில் கடந்த ஆண்டு டெங்கு பரவலுக்கு அதிக மழை மற்றும் அதிக வெப்பமான சூழலே காரணம் என உலக சுகாதார அமைப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Readmore: ‘தமிழ்நாட்டில் விரைவில் ஆட்சி மாற்றம்’..!! பிரதமர் முன்பு பரபரப்பை கிளப்பிய ஹெச்.ராஜா..!!