fbpx

அமெரிக்காவை நடுங்க வைத்த புயல்..!! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!! பொதுமக்கள் பீதி..!!

அமெரிக்காவில் மிசிசிபி மாகாணத்தில் புயலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்கடாக காட்சி அளித்தன. ஏராளமான மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்சார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பல நகரங்கள் இருளில் மூழ்கியது. மேலும் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து தயாராக இருந்த மீட்பு குழுவினர் விரைந்து செயல்பட்டு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியிருந்த பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த புயலால் இதுவரை 26 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சிலர் மாயமானதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே, உயிரிழப்பு மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவில் பனிப்புயல் ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது பயங்கர புயல் வீசி பாதிப்பை ஏற்படுத்தி வருவது அங்குள்ள பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Chella

Next Post

"வா மச்சான் கஞ்சா அடிக்கலாம்........." ஊராட்சி மன்ற துணை தலைவர் மகனுக்கு நேர்ந்த துயரம்!

Sun Mar 26 , 2023
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வனப்பகுதியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் மகன் பிணமாக தோன்றியெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக கஞ்சா போதைக்கு அடிமையான சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மற்றும் செந்தமிழ் செல்வி தம்பதியினர். இவர்களில் செந்தமிழ் செல்வி தூத்துக்குடி கிராமத்தின் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர்களது மகன் ஜெகன் ஸ்ரீ. […]

You May Like