நாகரீக வாழ்க்கைக்குள் நுழையாமல், தங்களது பல நூறு வருட மரபு, பாரம்பரியம், கலாச்சாரத்தையே இன்றுவரை நம்பிக்கையுடன் கடைப்பிடித்து வருபவர்கள் ஆப்பிரிக்க பழங்குடி மக்கள். வெளிஉலக தொடர்பில்லாமல், தங்களுக்குரிய சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வருபவர்கள். இவர்களின் திருமண நடைமுறையே வித்தியாசமானது. அந்த வகையில் மனிதனின் சடலத்தை உண்ணும் பழங்குடி மக்கள் ஆப்பிரிக்காவின் மலாவி பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் புனித தலத்திற்கு இறந்தவரது உடலை எடுத்துச் சென்று, சடலத்தின் தலையை வெட்டி எடுத்த பின் உடலின் உட்பகுதியை நீரால் நன்கு கழுவுகின்றனர். பின்னர் இறந்தவரின் உடலை தீயில் சுட்டு அவரது பிணத்தை சாப்பிடுவார்களாம். கூட்டமாக அந்த பிணத்தை சுற்றி அமர்ந்து அவர்கள் சாப்பிடும் போது இறந்தவர்களுக்காக பாடல் பாடிக்கொண்டே அழுதுகொண்டே ரசித்து சுவைத்து சாப்பிடுவார்களாம். அப்படியாக சாப்பிடுவது இறந்தவர்களுக்கு அவர்கள் செய்யும் மரியாதையாக அந்த மக்கள் பார்க்கின்றனர்.
சடலத்தை கழுவிய நீரிலும் சமையல் செய்து உண்கின்றனர். இதே ஆப்பிரிக்காவில் மற்றொரு பழங்குடியின பிரிவினரில், திருமணமான தம்பதிகளுடன், மணமகளின் அம்மாவும் முதலிரவில் பங்கேற்பார். அன்பாக, அனுசரணையாக கணவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், குடும்பத்தில் மகிழ்ச்சியாக எப்படி வாழ வேண்டும், என்றெல்லாம் மணமகளுக்கு, அவரது தாய் சொல்லி தருவாராம்
ஆண்கள் தங்களுக்கான மனைவியை அடைவதற்கு முன் ஒரு சடங்கு நடத்தப்படுகிறது. இது ஓர் வித்தியாசமான திருமண சடங்கு, ஆணின் பிறப்புறுப்பில் சாட்டையால் அடிக்கின்றனர். அந்த வலியைத் தாங்கிக் கொள்பவனுக்கே பெண் தரப்படும்.. இல்லையெனில் மணமகள் கிடையாது. இந்த வகையில் தான் மணமகனின் ஆண்மை சோதிக்கப்படுகிறது. சில நேரங்களில் மரணமுறும் அபாயங்களும் உண்டு.
எத்தியோப்பியாவின் ஹாமர் பழங்குடியினரைச் சேர்ந்த ஆண்கள், தங்களது ஆண்மையை நிரூபிக்க, விசித்திர பழக்கத்தை பின்பற்றினர். அதாவது ஆடையின்றி வானம் நோக்கி படுத்து, காளைகளை ஆண்களின் மேல் காளை ஒட விடுகின்றனர். தென் சூடான் மற்றும் தென்மேற்கு எத்தியோப்பிய பகுதியில் வாழ்ந்து வரும் சுர்மா பழங்குடியின பெண்களின் தோற்றம் சற்று வித்தியாசமாக இருக்கும். ஏனெனில் இந்த பழங்குடியின பெண்கள் பூப்படையும் போது, கீழ் உதட்டில் மூலிகைப் பொருட்கள் மற்றும் களிமண்ணால் செய்யப்படும் தகடு ஒன்றை பொருத்தப்படும். இது நமக்கு பயங்கரமாக காணப்பட்டாலும், அப்பெண்கள் அதை அழகாக கருதுகின்றனர்.
Read more:பாலியல் வன்கொடுமைக்கு யோனிக்குள் ஆண்குறி ஊடுருவுவது அவசியமில்லை..!! – கேரள உயர் நீதிமன்றம்