80’ஸ் நடிகை ரேவதி இளைஞர்கள் மனதில் கனவுக்கன்னியாக இடம்பிடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். மண்வாசனை, தேவர் மகன், மௌனராகம், புதுமை பெண் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிப்பால் அசத்தியிருக்கிறார்.
அப்போது தமிழ் சினிமாவில் ரேவதிக்கு அதிக மார்க்கெட் இருந்தது. ரேவதியின் சுட்டித்தனமான குணமும், அவரது சின்ன முகமும் தொடர்ந்து அவர் கதாநாயகியாக இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்த சமயத்தில், மற்ற கதாநாயகிகளுக்கு வரும் படங்களும் கூட பிறகு ரேவதிக்கு கைமாறின. அந்த காலத்தில் இருந்த பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து வந்தார் ரேவதி. தன்னுடைய கலக்கலான திரைப்படங்களை கொடுத்து வந்த நிலையில், மலையாள இயக்குனரான சுரேஷ் சந்திர மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு, 2013ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர். ரேவதியை சுரேஷ் சந்திரமேனன் குழந்தை இல்லாததால் தான் விவாகரத்து செய்தாராம்.
இதனால் மனம் நொந்துபோன ரேவதி, கணவரை பிரிந்த பின்னர் டெஸ்ட்டியூப் முறையில் தனது 50-வது வயதில் பெண் குழந்தை பெற்றுக் கொண்டாராம். எந்த காரணத்துக்காக கணவர் விட்டு சென்றாரோ அதை நிரூபித்து காட்டும் வகையில் பெண் குழந்தையை பெற்று மகளுடன் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஆனால், ரேவதி குழந்தை இல்லாததால் அவர் பல கேலி, கிண்டல்களால் மிகுந்த அம்மண உளைச்சலுக்கு ஆளாகினாராம். குழந்தை பிறந்து பிறகு அவர் முழு நேரமும் மகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில், ரேவதியின் மாஜி கணவர் சுரேஷ் சந்திரமேனன் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு தூது அனுப்பிக்கொண்டு இருக்கிறாராம்.
ரேவதியின் திரையுலக நண்பர்களும் கணவரோடு சேர்ந்து வாழ சொல்லி கோரிக்கையை தெரிவித்து வருவதால் ரேவதி என்ன முடிவு எடுப்பார் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. வாழ்க்கையில் குழந்தையின்மையால் பலத்த போராட்டத்தை சந்தித்தவர், இறுதியில் டெஸ்ட் டியூப் பேபியை பெற்று நிம்மதியாக வாழ்ந்து வரும் நிலையில், மீண்டும் சுரேஷ் சந்திராவுடன் சேர்ந்து வாழ்வாரா என்பது கேள்வி குறியாக இருக்கிறது.