2023 – 2024ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட உள்ளது.
2023 – 2024ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார். இதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பொது பட்ஜெட் மின்னணு வடிவில் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படவுள்ளது.