fbpx

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில் வேலை.. ரூ.2 லட்சம் வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க ரெடியா..?

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு சேவையில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) வெளியிட்டுள்ளது. மூத்த ஆய்வாளர் பதவிகள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது.

பணியிட விவரம்:

மூத்த ஆய்வாளர் – 14

வயது வரம்பு: தமிழ்நாடு உணவு பாதுகாப்பு சேவையில் இருக்கும் இப்பணியிடங்களுக்கு 01.07.2025 தேதியின்படி, 32 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, டிஎன்சி, பிசி, எம்பிசி பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.

கல்வித்தகுதி:

* மூத்த ஆய்வாளர் பதவிக்கு வேதியியல்/ உயிர் வேதியியல்/ உணவு தொழில்நுட்பம்/ உணவு மற்றும் மருந்துகள் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் மற்றும் 4 ஆண்டுகளுக்கு அனுபவம் தேவை. (அல்லது)

* வேதியியல்/ உயிர் வேதியியல்/ உணவு தொழில்நுட்பம்/ மைக்ரோபயோலஜி/ உணவு மற்றும் மருந்துகள் ஆகியவற்றில் முதுகலை பட்டம் மற்றும் 2 ஆண்டுகள் அனுபவம் தேவை.

சம்பளம்: இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.56,100 முதல் ரூ.2,057,00 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கணினி வழியில் தேர்வு நடைபெறும். தமிழ் மொழி தகுதி தேர்வு கட்டாயமாகும். தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு பணி நியமனம் வழங்கப்படும். நேர்காணல் கிடையாது.

விண்ணப்பிப்பது எப்படி? இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும்.

Read more: அதிகாலையில் நிறைவேறிய வக்பு சட்ட மசோதா..!! சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுப்போம்..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

English Summary

The Tamil Nadu Food Safety Service has issued a notification to fill vacant posts.

Next Post

லாலு பிரசாத் யாதவுக்கு என்ன ஆச்சு..? உடல்நிலை கவலைக்கிடம்..? மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

Thu Apr 3 , 2025
RJD chief Lalu Prasad Yadav has been admitted to Delhi's AIIMS hospital due to health problems.

You May Like