fbpx

அட்டகாசம்…! அரசு அறிவித்த பொங்கல் போனஸ்…! யார் யாருக்கு பொருந்தும்…? முழு விவரம்

தமிழ்நாட்டில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்ககள் உள்ளிட்டோர்களுக்கு தமிழ்நாடு அரசு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘அரசின் நலத் திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் (C & D Group) சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.

தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள், மற்றும் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும். “சி” மற்றும் “டி” பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும். மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம் அரசிற்கு 221 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

பெண்களின் மாதவிடாய் காலத்தில் உதவும் பேரீச்சை மற்றும் பாதாம்..!

Tue Dec 27 , 2022
பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் அதிக அளவில் ஏற்படும் ரத்த போக்கினால் உடல் விரைவில் சோர்வடைந்து விடும். இதனால் அவர்களுக்கு மீண்டும் ஊட்ட சத்துக்களை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்காக தான் பேரீச்சம்பழம் உதவுகிறது. இது பெண்களுக்கு ரத்த சோகை பிரச்சினையில்லாமல் இருக்க பெரிதும் பயன்படுகிறது.  3 பேரீச்சம் பழங்களை எடுத்துக் கொண்டு அதனுடன் பாதாம் பருப்புகளை சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வர வேண்டும். இதனால் […]

You May Like