fbpx

தமிழகமே எதிர்பார்த்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று வாக்கு பதிவு…! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!

இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று விடுமுறை தினமாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா சமிபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவையடுத்து தொகுதி காலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனுடன் ஈரோடு கிழக்கு தொகுதி உட்பட மற்ற மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 27-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தேர்தலுக்கான பிரச்சாரம் கடந்த 25ஆம் தேதி உடன் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை முழுமையாக ஆற்ற வேண்டும் என்ற காரணத்தினால் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேகாலயா, நாகாலாந்து சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.

Vignesh

Next Post

தவறுதலாக கூட இந்த உணவுகளை பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.. பல பிரச்சனைகள் ஏற்படலாம்..

Mon Feb 27 , 2023
நம் உடலுக்கு நன்மை பயக்கும் உணவுப் பொருட்களில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது.. பாலில் கால்சியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் டி ஆகிய பண்புகள் நிறைந்துள்ளன.. எனவே பால் உட்கொள்வதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.. ஆனால் பால் உட்கொள்ளும் போது பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். நாம் தவறான கலவையில் பாலை குடித்தால் அது நம் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். அந்த வகையில், […]
ஷாக்கிங் நியூஸ்..!! நாளை முதல் பால் விலை அதிரடி உயர்வு..!! தமிழக மக்கள் அதிர்ச்சி..!!

You May Like