சென்னையை அடுத்த தாழம்பூர் அடுத்த பொன்மார் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன் சோழிங்கநல்லூர் அருகே ஐய்யப்பா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறான். அதே போல் நாகர்கோவிலை சேர்ந்த ஹெப்சிபா (28) என்பவர் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்த நிலையில், அவருடன் பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும், இவர் சோழிங்கநல்லூரில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஹெப்சிபா வீட்டிற்கு மாணவன் சென்று வந்ததும் அவர்களுக்குள் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெற்றோர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் தெரியவந்ததை அடுத்து, ஆசிரியை ஹெப்சிபாவை கடந்த 15 நாட்களுக்கு முன்னர் பள்ளி நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக மாணவனை காணவில்லை என பெற்றோர் தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், கோயம்புத்தூர் காரமடை அருகே வீடு எடுத்து இருவரும் தங்கியுள்ள இடத்திற்கு விரைந்து மாணவனை மீட்டனர்.
மேலும், அவர்களை தாழம்பூர் காவல் நிலையம் அழைந்து வந்த நிலையில், காணாமல் போன மாணவன் மீட்கப்பட்டதாக வழக்கு முடித்த நிலையில், மைனர் மாணவனுடன் வெளியூரில் தனியாக தங்கியதால் ஹெப்சிபா மீது விசாரிக்க வேண்டியுள்ளதால், அவர்கள் இருவரையும் சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வர முறையாக சம்மன் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் பாதுகாப்புடன் சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஹெப்சிபா மீது போக்சோ சட்டம், மைனர் பள்ளி மாணவன் கடத்தல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆங்கில ஆசிரியை மைனர் பள்ளி மாணவனை கடத்திச் சென்று தனியாக அறை எடுத்து தங்கிய நிலையில், தற்போது மகளிர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.