fbpx

TET: இடைநிலை ஆசிரியர் பணி…! மொத்தம் 53,533 பேர்…! வெளியான முடிவுகள்…! முழு தகவல் உள்ளே…

இடைநிலை ஆசிரியர் பணிக்குரிய தகுதிக்கான தாள் ஒன்று தேர்வு எழுதியவர்களின் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2022-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தாள் ஒன்றிற்கு கம்ப்யூட்டர் மூலம் அக்டோபர் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை காலை மற்றும் மாலை இருவேளைகளில் தேர்வினை நடத்தியது. இந்தத் தேர்வில் ஒரு லட்சத்து 53, 533 பேர் கலந்து கொண்டனர். தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடை குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் அக்டோபர் 28-ம் தேதி வெளியிடப்பட்டது.

தற்காலிக விடை குறிப்பிற்கு அக்டோபர் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனையை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்பொழுது 1,125 தேர்வர்கள் 3,696 விடைகள் மீது ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். மேலும் 491 கேள்விகள் மீது 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற்ற தேர்வில் தங்களது ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் பெறப்பட்ட தகவலும் பாட வாரியாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன.

ஆய்வுக்குப் பின்னர் பாடவாரியாக வல்லுநர் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடை குறிப்புகளின் அடிப்படையில் தேர்வர்களுக்கு கம்ப்யூட்டர் வழி தேர்வினை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன. தற்பொழுது தேர்வு எழுதிய அனைத்து தேர்வுகள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடை குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அதிரடி...! 1 முதல் 8 -ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை...! முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

Thu Dec 8 , 2022
சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையை மத்திய அரசு திடீரென ரத்து செய்துள்ளதை கைவிட்டு மீண்டும் வழங்கிட வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், 29-11-2022 நாளிட்ட மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் கடிதத்தில், கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயத் தொடக்கக் கல்வி (1 முதல் 8 -ம் வகுப்பு வரை) வழங்குவதை அரசாங்கம் […]

You May Like