fbpx

சிறப்பு வகுப்புகளுக்கு வரும் மாணவிகளை சிறப்பாக கவனித்த ஆசிரியர்..!! மனைவியும் உடந்தை..!! பரபரப்பு

பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு 2 மாணவிகள் தங்கள் உறவினர்களுடன் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தங்களை தனியார் பள்ளி ஆசிரியர் அமித்குமார் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறியிருந்தனர். புகாரைப் பெற்று விசாரணை நடத்திய போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. தனியார் பள்ளி ஆசிரியரான அமித்குமார் தன்னிடம் சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

மேலும், மாணவிகளிடம் பாலியல் அத்துமீறுவதை வீடியோ பதிவு செய்து கொள்வாராம். பின்னர், அதை காண்பித்து மாணவிகளை மிரட்டி தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று அங்கும் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது போல பல மாணவிகளை அமித்குமார் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதில் கொடுமை என்னவென்றால் அமித்குமாரின் இந்த செயலுக்கு அவரது மனைவி சாஹிபா குாாரியும் உடந்தையாக இருந்துள்ளார்.

மேலும், காவல்துறை நடத்திய விசாரணையில் மற்றொரு அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. தனியார் விடுதியில் மாணவிகளுடன் அமித்குமார் பாலியல் தொடர்பில் இருப்பதை அமித்குமாரின் உதவியுடன் அந்த விடுதியின் மேலாளர் வினோத்குமார் குப்தா வீடியோவாக பதிவு செய்து வைத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை லக்கிசராய் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஷன் குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து வீடியோக்கள் அடங்கிய சிப், மொபைல் போன்கள், சிசிடிவி மூலம் வீடியோவை பதிவு செய்ய பயன்படுத்திய டிவிஆர் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அமித்குமார், அவரது மனைவி சாஹிபா குமாரி மற்றும் தனியார் விடுதி மேலாளர் வினோத்குமார் குப்தா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழை..!! வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்..!!

Fri May 26 , 2023
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், […]

You May Like