fbpx

‘ரவுடிகளை வேட்டையாடும் வேட்டையன்’ என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக மிரட்டும் ரஜினி..!! படத்தின் டீசர் எப்படி இருக்கு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘வேட்டையன்’ திரைப்படம். இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் கூட இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது என்பது தெரிந்தது.

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகிணி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இன்று (செப் 20) வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே ’மனசிலாயோ’ பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் ‘Hunter Vantaar’ பாடலும் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் வேட்டையன் படத்தின் Prevue எனப்படும் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், ’Encounter Specialist’ என்ற டயலாக் உடன் டீசர் மூவ் ஆகிறது.

பின்னர், ’நமக்கு தான் எஸ்பி என்கின்ற பெயரில் எமன் வந்துருக்கான் ல ’ என ரஜினிகாந்தை குறிப்பிடும் வசனங்களும் டீசரில் இடம்பெற்றுள்ளது. அதன் மூலம் வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் எஸ்பியாக உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. தற்போது இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Read more ; குட் நியூஸ் இளைஞர்களே.. குரூப் 4 பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு..!! – தமிழக அரசு

English Summary

The teaser of Superstar Rajinikanth’s vettaiyan directed by TJ Gnanavel, is out.

Next Post

உங்கள் வீட்டில் இருக்கும் கேஸ் சிலிண்டரில் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா..? மறந்துறாதீங்க..!!

Sat Sep 21 , 2024
Gas cylinders used at home also have an expiry date. Experts from the sector say that there is a risk of explosion if this outdated cylinder is used.

You May Like