fbpx

திறந்து கிடந்த வீட்டுக்குள் திடீரென புகுந்த வாலிபர்..!! விடிய விடிய கதறிய ஆசிரியை..!! பகீர் சம்பவம்

வீட்டில் தனியாக இருந்த ஆசிரியையை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு மிரட்டி சென்ற வாலிபர் செல்போன் சிக்னல் மூலம் சிக்கினார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் செம்பூர் பகுதியில் வசித்து வந்தவர் கணேஷ் ஜெயக்குமார் வர்மா. 45 வயதான இவர், தான் வசித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஆசிரியையை பின் தொடர்ந்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி அன்று திடீரென்று ஆசிரியை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, தனியாக இருந்த ஆசிரியையை பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார். பயத்தில், ஆசிரியை சத்தம் போட்டதால், அந்த நபர் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார்.

பின்னர் மே 13ஆம் தேதி அன்று இரவில் ஆசிரியை தனியாக இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட அந்த நபர், மீண்டும் இரவு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இருக்கிறார். மீண்டும் அவரைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை வெளியே போக சொல்லி சத்தம் போட்டுள்ளார். ஆனால், அவரை மிரட்டி, அடித்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். பின்னர் நடந்ததை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டு சென்றுள்ளார். இனியும் பொறுமையாக இருந்தால் தனக்கு ஆபத்து என்பதை உணர்ந்த ஆசிரியை உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், கணேஷ் ஜெயக்குமாரை தேடி வந்த போது அவர் தலைமறைவாகி விட்டார். அவரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அந்த செல்போன் எண் காட்டிய சிக்னலை வைத்து போலீசார் கணேஷ் ஜெயக்குமார் வர்மாவை பிடிக்க சென்றிருக்கிறார்கள். ஆனால், கணேஷ் தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்ததால் அவரை பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் இருந்து வந்தது.

ஆனாலும், இதனை சவாலாக எடுத்துக் கொண்டு போலீசார் தொடர்ந்து முயற்சிக்க, நேற்று முன்தினம் இரவு கணேஷ் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த ஆசிரியையை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு மிரட்டி சென்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

இன்று முதல் 31-ம் தேதி வரை...! BSNL மொபைல் வேனிட்டி எண்களின் மின்-ஏலம்...!

Thu May 25 , 2023
பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்டம் இன்று முதல் 31.05.2023 வரை வேனிட்டி மொபைல் எண்களை மின்-ஏலம் மூலம் விற்பனை செய்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்களாக ஃபேன்சி எண்களைப் பெற www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். ஃபேன்சி எண்களின் ஆன்லைன் ஏலத்திற்கு. ஏலம் எடுப்பதற்கான கடைசி தேதி 31.05.2023 ஆகும்.மொபைல் எண் என்பது ஒருவரது எளிதான அடையாளம், இதன் மூலம் நாம் மற்றவர்களையும், மற்றவர்கள் நம்மையும் தொடர்பு கொள்ளலாம். ஒரு […]

You May Like