பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டு வெடித்ததில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பெஷாவரில் உள்ள மசூதியில் இன்று மதியம் வழக்கம்போல தொழுகை நடைபெற்றது. இதில், ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில், திடீரென குண்டு வெடித்தது. பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்ததாக காவல்துறையினர் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த பயங்கர தாக்குதலில் மசூதி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து சேதமானது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 90 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவ இடத்தில் மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரலாம் என போலீஸ் தரப்பில் அச்சம் தெரிவித்துள்ளனர்.