இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் உயிரிழந்த இளம்பெண்ணை நிர்வாணமாக தீவிரவாதிகள் எடுத்துச்செல்லும் கொடூரமான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீன போராளிகள் ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் எல்லைக்குள் ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் ராணுவத்தினர் பதில் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். காஸாவிலிருந்து ஏவப்படும் ஆயிரக்கணக்கிலான ஏவுகணைகளால் இஸ்ரேல் எல்லைக்குள்ளும் பதற்றம் சூழ்ந்துள்ளது. இந்த கொடூரத் தாக்குதலில் பொதுமக்களைக் கொன்று பிணைக் கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்துவைத்துள்ளனர். மேலும், தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் உடல்களை திறந்த லாரிகளில் ஏற்றி ஊர்வலம் செல்லும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த திடீர் தாக்குதல் காரணமாக இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் போருக்குத் தயார் என அறிவித்ததோடு, பதிலடி மற்றும் நேரடி மோதல்களை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், இஸ்ரேலிய பெண்ணின் அரை நிர்வாண சடலத்தை திறந்த டிரக்கில் எடுத்துக்கொண்டு நகரத்தில் அணிவகுத்துச் செல்லும் கொடூரமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து பெரும் கண்டனகள் எழுந்துள்ளன.