fbpx

திருடிய மகிழ்ச்சியில் குடித்துவிட்டு மெத்தையில் உறங்கிய திருடன்..!! தட்டி எழுப்பிய போலீஸ்..!! வெளுத்து வாங்கிய மக்கள்..!!

காரைக்குடி அருகே திருடச் சென்ற வீட்டிற்குள் மது அருந்திவிட்டு மெத்தையில் படுத்து தூங்கிய திருடனை கதவை உடைத்து காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காவல் நிலையம் அருகே வசித்து வருபவர் வெங்கடசன். இவரது சொந்த ஊர் நடுவிக்கோட்டை. இங்குள்ள பூர்வீக வீட்டின் வெளிப்பக்க கேட், திறந்திருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் வெங்கடேசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, காரைக்குடியில் இருந்து விரைந்து வந்த வெங்கடேஷ், வீட்டின் கதவை திறக்க முயன்ற போது உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால், நாச்சியாபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டின் கதவை தட்டிப்பார்த்தனர். யாரும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அதே ஊரைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் சுதந்திர திருநாதன் மெத்தையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.

ஓட்டை பிரித்து உள்ளே நுழைந்த கொள்ளையன், முன்பக்க கதவை உள்பக்கமாக பூட்டி, வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் சேகரித்து மூட்டையாக கட்டி வைத்துவிட்டு மகிழ்ச்சியில் மது அருந்தி உள்ளான். போதையில் காதில் ஹெட்செட் மாட்டி பாட்டு கேட்டபடி அங்கிருந்த கட்டிலின் மேல் உள்ள மெத்தையில் படுத்ததால் திருடிய களைப்பில் சுதந்திர திருநாதன் அயர்ந்து தூங்கியது தெரியவந்தது. போலீசார், அவனைத் தட்டி எழுப்பியதும் ஒன்றும் அறியாதது போல் திடுக்கிட்டு விழித்த திருடனை ஊர் பொதுமக்கள் சுளுக்கெடுத்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து திருடனை மீட்ட போலீசார், அவனை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

'வாரத்திற்கு ஒரு முறை இன்சுலின்'.. சர்க்கரை நோயாளிகளுக்கான Game-changer.. இந்தியாவில் எப்போது அறிமுகம்..?

Fri Feb 17 , 2023
இந்தியாவில் 2025ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் “வாரத்திற்கு ஒருமுறை இன்சுலின்” மருந்தை அறிமுகப்படுத்த நோவோ நார்டிஸ்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இன்று நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் நீரிழிவு அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் மொத்த இறப்புகளில் 2 சதவீதம் நீரிழிவு நோயால் மட்டுமே ஏற்படுகிறது. நீரிழிவு நோய் என்பது ஒரு நாள்பட்ட நிலையாகும்.. இது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாவதால் ஏற்படும் நோயாகும்.. சர்க்கரை […]

You May Like