fbpx

3-வதும் பெண் குழந்தை..!! ஆத்திரத்தில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துக் கொன்ற கணவன்..!!

மகாராஷ்டிராவில் 3-வதும் பெண் குழந்தை பிறந்ததால், மனைவியை தீவைத்து எரித்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தின் கங்காகேட் நாகாவை சேர்ந்தவர் குண்ட்லிக் உத்தம் காலே. இவருக்கு வயது 32. இவரது மனைவி மைனா குண்ட்லிக். இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்த மைனாவுக்கு மீண்டும் பெண் குழந்தையே பிறந்துள்ளது. இதனால் மனைவியிடம் கணவர் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சம்பவத்தன்று இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது கணவர் குண்ட்லிக் உத்தம் காலே, மனைவி மைனா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதனால், மனைவி அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினார்.

இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் தீயை அணைத்து மைனாவை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மைனாவின் சகோதரி கங்காகேட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, கொலை வழக்கில் காலேவை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : ஊழியர்களே..!! உங்கள் பி.எஃப். எங்கு முதலீடு செய்யப்படுகிறது தெரியுமா..? கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

English Summary

Police in Maharashtra have arrested a husband who set his wife on fire after she gave birth to their third daughter.

Chella

Next Post

குறைந்த காலத்தில் 18 கிலோ எடையை குறைத்த இளம் பெண்.. இதுதான் வெயிட் லாஸ் சீக்ரெட்டாம்..!!

Mon Dec 30 , 2024
Four things helped me lose 18 kg; Young woman shares her weight loss secret

You May Like