fbpx

Election 2024: மூன்றாம் கட்ட வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது…!

2024 பொதுத் தேர்தலின் மூன்றாம் கட்ட வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

மக்களவை பொதுத் தேர்தலில் 12 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான அறிவிக்கை இன்று வெளியிடப்படும். இதனிடையே, மத்திய பிரதேசத்தில் ஒத்திவைக்கப்பட்ட பெதுல் தொகுதி தேர்தலுக்கான அறிவிப்பும் இன்று வெளியிடப்படும்.

இந்த 94 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும், மத்தியப் பிரதேசத்தின் பெதுல் தொகுதியில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தலும் 07.05.2024 அன்று நடைபெறும். மத்திய பிரதேசத்தில் 2-வது கட்டமாக நடைபெறவிருந்த பெதுல் தொகுதிக்கான தேர்தல் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மரணம் அடைந்ததால் ஒத்திவைக்கப்பட்டது.

அசாம், பீகார், சத்தீஸ்கர், தாத்ரா & நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை மூன்றாம் கட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஆகும்.

Vignesh

Next Post

வானில் நிகழ்ந்த அதிர்ச்சி!… பெரும் விபத்து தவிர்ப்பு!… மிரண்டு போன விஞ்ஞானிகள்!

Fri Apr 12 , 2024
NASA: ரஷ்ய- அமெரிக்கா செயற்கைக்கோள்கள் அருகே வந்து மோதாமல் விலகிச் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகளை நிம்மதியடைந்தனர். சமீப காலமாகவே விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகள் அதிகரித்துவிட்டது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு விண்வெளிக்கு செயற்கைக்கோளை அனுப்பி பலவிதமான ஆய்வுகள் செய்து வருகின்றனர். விண்வெளியின் பல பகுதிகளையும் உலக நாடுகள் ஆய்வு செய்து வரக்கூடிய நிலையில், சில நாடுகள் விண்வெளிக்கு தங்களின் […]

You May Like