fbpx

ஆக்ரோஷமாக தாக்கி உடலை எடுத்து சென்ற புலி…! ஜங்கில் சஃபாரியின் போது நடந்த விபரீதம்..!

ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில், வாகனத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று புலிகளை காட்டும்போது புலி தாக்கி ஒருவர் உயிரிழப்பு.

உத்தரகாண்டில் ஜிம் கார்பெட்தேசிய பூங்கா இந்த மாதம் நவம்பர் 15ஆம் தேதி தான் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஜங்கில் சஃபாரி எனப்படும் வாகனத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று வனப்பகுதியை சுத்தி காட்டிய நிகழ்வு நடந்தது, பின் அவர்கள் திரும்பி வரும்போது திடீரென பதுங்கியிருந்த புலி ஒன்று அந்த பகுதியில் வனத்துறைக்காக பணியாற்றிய நபரை தாக்கி கொன்றுள்ளது. மேலும் கொல்லப்பட்ட நபரின் உடலை இழுத்து சென்றுள்ளது.

புலி தாக்கி உயிரிழந்த நபரின் பெயர் ராமு என்றும், அவருக்கு வயது 60 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்தியது ஆன் புலி எனவும், தாக்குதலின் போது அது மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததாகவும், தாக்குதலை நேரில் பார்த்த மக்கள் கூறுகின்றனர். இந்த மாதத்தில் நடந்த இரண்டாவது உயிரிழப்பாக இது மாறியுள்ளது. ஏற்கனவே அந்த சரணாலயத்தின் ஊழியர் ஒருவரை புலி தாக்கி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குளிர்காலத்தில் இந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருவர். இந்த பகுதியில் புலி தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் இடையே பதற்றத்தையும், பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்போது ஜிம் கார்பெட் புலிகள் சரணாலயத்தில் ஜங்கில் சஃபாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

"எப்போதான் மாறுமோ..?" தங்கை மற்றும் காதலன் கௌரவக் கொலை.! போலீசில் சரணடைந்த அண்ணன்.!

Thu Nov 23 , 2023
பாகிஸ்தானை சேர்ந்த காதல் ஜோடிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முசாஃபர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முலாசீம் ஹூசைன். தங்கை ஜைதூன் பிபீ ஃபயாஸ் ஹுசைன் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதலுக்கு முலாசீம் ஹூசைன் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார். இந்நிலையில் காதலர்கள் இருவரும் தங்களது காதலில் உறுதியாக இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் […]

You May Like