நியாயவிலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
நியாயவிலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு. சென்னை மற்றும் புறநகரில் காலை, 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும், பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; நியாயவிலைக் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மற்றும் புறநகரில் காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும், பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும். மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல், பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் ரேஷன் கடைகள் செயல்பட வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.