வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ’தி கோட்’. AGS என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, ஜெயராம் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கடந்த ஜனவரி 1ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து வெளியான பாடல்கள், போஸ்டர்கள் இது வழக்கமான விஜய் படமாக இருக்காது என்பதை உணர்த்தின. வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கும் தி கோட் படத்தின் ட்ரெய்லரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.