Training Plane: ஜார்க்கண்டின் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள ஏரோட்ரோமில் இருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் காணாமல் போனது, அதைத் தொடர்ந்து 2வது நாளாக தேடுதல் பணி நடைபெற்றுவருதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜார்க்கண்டின் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள ஏரோட்ரோமில் இருந்து அல்கெமிஸ்ட் ஏவியேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான செஸ்னா 152 ரக விமானம், செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் புறப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே விமானம் காணாமல் போனதாகவும், கடைசியாக செரைகேலா-கர்சவான் மாவட்டத்தில் உள்ள நிம்திக்கு அருகில் இருந்ததாக கிழக்கு சிங்பூமின் துணை ஆணையர் அனன்யா மிட்டல் தெரிவித்தார்.
கிழக்கு சிங்பூம் மற்றும் செரைகேலா-கார்ஸ்வான் மாவட்ட நிர்வாகங்கள், காவல்துறை மற்றும் வனத்துறையினர் விமானத்தை தேடி வருகின்றனர். நிம்திக்கு அருகிலுள்ள பகுதிகளைத் தவிர, மேற்கு வங்காளத்தின் புருலியா மாவட்டத்திலும் தேடுதல் நடத்தப்பட்டது என்றார். இருப்பினும்,நீர்த்தேக்கத்தில் விமானத்தின் இடிபாடுகளைப் பார்த்ததாக உள்ளூர்வாசிகள் கூறியதை அடுத்து, சாண்டில் அணைக்கு தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், “இன்னும் உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் அணையில் தேடுதல் நடத்தப்படுகிறது” என்று செரைகேலா-கர்ஸ்வான் காவல்துறை கண்காணிப்பாளர் முகேஷ் குமார் லுனாயத் பிடிஐயிடம் தெரிவித்தார்.
Readmore:PM Kisaan: மத்திய அரசு வழங்கும் ரூ.6000 வரவில்லையா…? வரும் 23-ம் தேதி சிறப்பு முகாம்..