அமெரிக்காவில் திருமணமாகி கர்ப்பமான பிறகு தனது கணவர் யார் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை பெண்ணுக்கு தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் டிக்டாக்கில் 3,00,000 பின்தொடர்பாளர்களைக் கொண்ட பிரபலமான பெண் ஒருவர், தான் திருமணம் செய்துகொண்ட நபர் தனது உறவினர் என்பதை அறிந்து ஆச்சரியமடைந்ததாக சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் கர்ப்பமானபோது, தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தேடிக்கொண்டிருந்தபோது இந்த அதிர்ச்சியூட்டும் உண்மையை அந்த பெண் கண்டுபிடித்துள்ளார்.

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தைச் சேர்ந்த மார்செல்லா ஹில் (42) என்ற பெண், தனது உறவினரை “தற்செயலாக திருமணம் செய்து கொண்டேன்” என்று டிக்டாக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் தற்செயலாக என் உறவினரை திருமணம் செய்து கொண்டதை யாரிடமும் பகிரங்கமாக சொல்லவில்லை என்று ஒப்புக்கொண்டார். தம்பதியினரின் பாட்டி மற்றும் தாத்தா உறவினர்கள் என்று தங்களுக்கு தெரியவந்துள்ளதாக கூறினார். இருவரும் குழைந்தைக்கான பெயரை தேர்ந்தெடுக்க தங்கள் தாத்தா, பாட்டி, கொள்ளுத்தாத்தா மற்றும் கொள்ளுப் பாட்டியின் பெயர்களைப் பார்த்துள்ளனர். இருவரது தாத்தா பாட்டியின் பெயர்களும் ஒரே பெயர்களாக இருந்துள்ளது. முதலில் இதனை வேடிக்கையாக பார்த்துள்ளனர். ஒருவேளை, கணவர் தனது கணக்கை திறந்து பார்த்துக்கொண்டு இருக்கிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஆனால், சரியாகத்தான் பார்க்கிறோம் என உறுதி செய்தப்பின், சந்தேகம் தீவிரமானது. உடனடியாக மார்செல்லா ஹில் மற்றும் அவரது கணவரும் ஒருவரையொருவர் தெரியுமா? என்று அந்தந்த தாத்தா பாட்டிகளை தொடர்புகொண்டு விசாரித்துள்ளனர். அப்போது தான் தெரிந்தது, அவர்களது தாத்தா பாட்டிகள் உறவினர்கள் என்று. அவர்களது முழு குடும்பத்தையும் சரிபார்த்ததில், ஹில் தம்பதியினர் குடும்பத்தில் மூன்றாவது உறவினர்கள் என்பது தெரியவந்தது. இதனை அவர்கள் கண்டுபிடித்தவுடன், தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், ஒருவரின் மூன்றாவது உறவினருடன் குழந்தை பெற்றுக்கொள்வதில் அபாயங்கள் ஏதும் இருக்கிறதா என்பதை ஆராய்ந்தனர்.
கூகுள் கூகிள் இதை உறுதிப்படுத்தியது, ”மூன்றாவது மற்றும் நான்காவது உறவினர்களை திருமணம் செய்வது இனப்பெருக்கத்திற்கு மிகவும் உகந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனென்றால், அவர்கள் “இரு உலகங்களிலும் சிறந்தவர்கள்” என்று லைவ் சயின்ஸ் கட்டுரையை மேற்கோள் காட்டி மார்செல்லா ஹில் கூறியுள்ளார். இந்த ஜோடி இப்போது வினோதமான செய்தியை காலப்போக்கில் ஏற்றுக்கொண்டதுடன், உறவுமுறையில் நன்மைகள் இருப்பதாகவும் கேலி செய்தனர். மற்றொரு வீடியோவில், மார்செல்லா ஹில் அவர்களின் திருமணம் உள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்றதாகவும், அவர்களது தாத்தா பாட்டி திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் பகிர்ந்து கொண்டார்.