fbpx

டிவிஎஸ் எக்ஸ்எல் இவி வெர்ஷனில் வரப்போகுது..!

டிவிஎஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களில் விரிவுபடுத்தும் நோக்கில் தற்போது டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த காப்புரிமை வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய டூவீலர் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தமிழகத்தின் ஓசூர் பகுதியில் ஆலையை அமைத்து வாகனங்களைத் தயார் செய்து விற்பனைக்கு இந்தியா முழுவதும் அனுப்பி வருகிறது. டிவிஎஸ் நிறுவனங்களின் வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரும் வரவேற்பும் இருக்கிறது

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டிவிஎஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் தன் காலடித் தடத்தைப் பதிப்பதற்காக முடிவு செய்து டிவிஎஸ் ஐகியூப் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இந்த டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாகக் களத்தில் சிறப்பான விற்பனையைப் பெற்று வருகிறது.

தற்போது டிவிஎஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களின் அணிவகுப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அடுத்தபடியாக புதிதாக ஒரு எலெக்ட்ரிக் டூவீலரை களம் இறக்க முடிவு செய்தது. இதற்காக டிவிஎஸ் நிறுவனம் கையில் எடுத்த விஷயம் தான் டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட். இந்த மொபட் பெட்ரோல் வெர்ஷனவில் இந்தியாவில் மிகப்பெரிய புரட்சியைச் செய்தது எனச் சொல்லலாம்.குறிப்பாகக் கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் பலர் தங்கள் முதல் டூவீலராக இந்த டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தையே வாங்கினார்.

இந்த டிவிஎஸ் எக்ஸ்எல் எலெக்ட்ரிக் மொட்டில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்ற பேச்சு தற்போது அதிக அளவில் இருக்கிறது. இந்த டிவிஎஸ் எக்ஸ்எல் எலெக்ட்ரிக் மொட் வெர்ஷனை பொருத்தவரை சிம்பிளான டிசைன், உறுதியான பிரேம், வட்டமான ஹெட்லைட், ஸ்பிலிட் சீ,ட் டியூப்ளர் கிராப் ரெயில், என அனைத்தும் பெட்ரோல் டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்-ல் உள்ள அதே டிசைன் தான் இதிலும் இருக்கிறது. முக்கியமான மாற்றம் என்று சொல்ல வேண்டுமானால் பேட்டரி பேக். இது சமமான எடை பகிர்வுடன் வாகனம் ஸ்டேபிளாக செல்லும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மொபட்டின் அறிமுகம் குறித்து டிவிஎஸ் நிறுவனம் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. லீக்கான காப்புரிமை குறித்த புகைப்படங்களை வைத்துத் தான் இவ்வளவு தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. இந்த மொபட்டை உருவாக்கும் முயற்சியில் தான் தற்போது டிவிஎஸ் நிறுவனம் இருக்கிறது. அடுத்த ஆண்டு இது விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி விற்பனைக்கு வரும்போது இது கைனடிக் இவி லூனா என்ற அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரவுள்ள மொபட்டிற்கு போட்டியாகக் களத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maha

Next Post

என்.எல்.சி.-யை எதிர்த்து போராட்டம்..!! அன்புமணி ராமதாஸ் அதிரடி கைது..!! போலீஸ் வாகன கண்ணாடி உடைப்பு..!! பரபரப்பு

Fri Jul 28 , 2023
தமிழ்நாட்டில் என்.எல்.சி-காக விளைநிலங்களை கையகப்படுத்தமாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பாமகவினர் பங்கேற்றனர். அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், மக்களை அச்சுறுத்தி நிலங்களை எடுக்கும் என்எல்சிக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு […]

You May Like