திருச்சியில் மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய மாமா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதாகும் பாரதி, வேன் ஓட்டுநராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவருக்கும் திருமணமாகி கடந்த சில நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், பாரதியின் வீட்டிற்கு வந்த மனைவியின் தங்கையான 17 வயது சிறுமியை வற்புறுத்தி பாரதி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதனால், 17 வயது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். சிறுமி கர்ப்பமானதால் வயிறு வலி ஏற்படவே சிறுமியின் உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்தனர். அப்போது, உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து திருச்சி அரசு பொது மருத்துவமனையில் கர்ப்பத்தை கலைத்துள்ளனர்.

இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பிற்கு ரகசிய தகவல் கிடைக்கவே சம்பவம் குறித்து லால்குடி மகளிர் போலீசாரிடம் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் அளித்த புகாரின்பேரில் லால்குடி மகளிர் போலீசார் போக்சோ வழக்கின் கீழ் பாரதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.