fbpx

Teachers 2024: ஆசிரியர் பணியிடங்களுக்கு உச்ச வயது வரம்பு 58 ஆக நிர்ணயம்…! யார் யாருக்கு பொருந்தும்…?

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களுக்கான உச்ச வயது வரம்பை பொது பிரிவினருக்கு 53 எனவும், இதர பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில்; பள்ளிக்கல்வித் துறையில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனத்துக்கான உச்ச வயது வரம்பை பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதர பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த உச்ச வயது வரம்பு அரசின் நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அவரது அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, பள்ளிக்கல்வி இயக்குனரின் கருத்துருவை கவனமுடன் ஆய்வு செய்து, பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனத்துக்கான உச்ச வயது வரம்பு மாற்றி அமைக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குப்படுத்துதல் சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகளின்கீழ் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களுக்கான உச்ச வயது வரம்பை பொது பிரிவினருக்கு 53 எனவும், இதர பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

English Summary: The upper age limit for teaching posts has been fixed at 58 years

Vignesh

Next Post

Annamalai: அடுத்தது இந்த திமுக அமைச்சர்தான்!… பைல்ஸ் ரெடி!… மொத்த கோபாலபுரமும் சிக்கும்!… அண்ணாமலை அதிரடி!

Sun Feb 25 , 2024
Annamalai: தி.மு.க., பைல்ஸ் விரைவில் வெளிவரும். அமைச்சர் தியாகராஜன் ஒரு மணி நேரம் 8 நிமிடம் போனில் பேசிய ஆடியோ பதிவை கேட்டால் மொத்த கோபாலபுரமும் சிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட ஜெய்ஹிந்த்புரத்தில் நடந்த யாத்திரையில் பேசிய அண்ணாமலை, 228 சட்டசபை தொகுதிகளில் யாத்திரை நடந்துள்ளது. பிப்.,27 ல் பல்லடத்தில் முடிகிறது. இது சாதாரண வேள்வி இல்லை. திராவிட அரசியலை வேரோடும், […]

You May Like