fbpx

20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு.. விவரம் இதோ..

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 41 காசுகள் குறைந்து இதுவரை இல்லாத அளவாக 81.50 காசுகளாக சரிவை கண்டுள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி தொடர்ந்து 3வது முறையாக வட்டி விகிதத்தை கடந்த 21 அன்று உயர்த்தியது. இதனால் டாலருக்கு நிகரான பண மதிப்பு பல்வேறு நாடுகளில் சரிவை கண்டது. கடந்த புதன்கிழமை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் குறைந்து 79.96 காசுகளாக சரிந்தது. இதேபோல் வியாழன், வெள்ளி ஆகிய நாட்களிலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63 காசுகள் குறைந்து 80.67 காசுகளாகவும், 39 காசுகள் குறைந்து 81.18 ஆகவும் சரிந்து வீழ்ச்சியடைந்தது. தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய தினம் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது.

அதாவது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 41 காசுகளாக குறைந்து 81.50 ஆக வீழ்ச்சியடைந்தது. கடந்த வெள்ளியன்று அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்வால் 3-வது நாளாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை கண்டது. இது கடந்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய சரிவாகும். இதனிடையே பங்குசந்தையான சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் தலா 2% சரிவை கண்டிருந்த நிலையில் இன்றும் கடும் சரிவில் காணப்பட்டுள்ளது. அதாவது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிந்து 57,488 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 214 புள்ளிகள் சரிந்து 17,113 புள்ளிகளிலும் வர்த்தகமாகிறது. மேலும் இந்த சரிவானது மேலும் தொடரலாமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது.

Maha

Next Post

“ மானம் இல்லாத நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்க வேண்டாம்..” திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்...

Mon Sep 26 , 2022
நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு – இந்தக் கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடைய வேண்டும் என்ற உயர்ந்த இலட்சிய நோக்கத்துடன்தான் தொடர்ந்து வழிநடத்தி இந்த இயக்கத்தை மக்களுக்கான இயக்கமாக, ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளை மீட்டுத் தருகிற இயக்கமாக செயல்பட்டு வருகிறது.. அண்ணா, […]
தலைவர் பதவிக்கு அக்.7இல் முக.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்..!! அக்.9இல் திமுக பொதுக்குழு கூட்டம்..!!

You May Like