fbpx

’திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் போர்’..!! ’புதிதாக வருபவர்கள் 30 நாட்களை கூட தாண்ட மாட்டார்கள்’..!! ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேச்சு..!!

சுள்ளான்கள் எல்லாம் தங்களை தாங்களே எம்ஜிஆர் என்று சொல்லி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். அப்போது திருத்தங்கல், கட்டளைப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர். இதனைத்தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜி பேசுகையில், “இன்னைக்கு வந்துட்டு சுள்ளான்கள் எல்லாம் நான் தான் எம்ஜிஆர்-னு சொல்றாங்க. அடுத்த முதல்வர் நான் தான் என்று சொல்கின்றனர். ஒருகாலமும் அப்படி நடக்காது.

திக, நீதிக்கட்சி, திமுக, அதிமுக. இது தான் இங்கு நிலைமை. தற்போது நடக்கும் போர் திமுகவுக்கும்-அதிமுகவுக்கும் தான். பாஜக, காங்கிரஸ் என யாரும் இந்த சீனில் கிடையாது. புதிதாக வரக்கூடியவர்கள் 30 நாட்களை தாண்ட மாட்டார்கள். அவர்களால் எதிர்ப்புகளை சந்திக்க முடியாது. பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல முடியாது” என்று காட்டமாக பேசினார்.

அவர், தமிழக வெற்றிக் கழகத்தை தான் மறைமுகமாக சாடியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் 10 நாட்களில் நடைபெற உள்ள தவெக முதல் மாநாடு, தமிழ்நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக போன்று, அதிமுக தரப்பிலும் விஜய்க்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் மட்டுமே உழைப்புக்கு மரியாதை

தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜி பேசுகையில், ”ஸ்டாலினை வீட்டுக்கும், எடப்பாடி பழனிசாமியை ஆட்சிக்கும் அனுப்ப முடியும் என்றால் அது அதிமுகவால் தான் முடியும். கலைஞர், ஸ்டாலின், உதயநிதி அடுத்து இன்பநிதி என திமுகவில் ஜனநாயகமே இல்லாமல் வாரிசு பதவிக்கு வரும் மன்னராட்சி நடைமுறைவுள்ளது. ஆனால், அதிமுகவில் ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து இன்று கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி வகிக்கிறார். ஆக அதிமுகவில் மட்டும் தான் உழைப்புக்கு மரியாதை இருக்கிறது” என பேசினார்.

Read More : இளைஞர்களே உஷார்..!! ஒருவர் எவ்வளவு நேரம் உட்கார்ந்து வேலை செய்யலாம்..? சாதாரணமா இருக்காதீங்க..!!

English Summary

AIADMK’s former minister Rajendra Balaji has severely criticized that all the chullans are calling themselves MGR.

Chella

Next Post

தொண்டையில் சளி சேருவதை அலட்சியப்படுத்தாதீர்கள்..!! புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்..

Sat Oct 19 , 2024
Do not ignore the mucus getting accumulated in the throat frequently, these 5 diseases including cancer can happen

You May Like