இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் விடுதலை 2. இப்படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக இப்படத்தை பார்த்து பார்த்து இயக்கி வந்தார் வெற்றிமாறன். இந்நிலையில், சினிமா விமர்சகரும், இயக்குனருமான ப்ளு சட்டை மாறன் எப்போதும் எந்த திரைப்படம் வந்தாலும் அதற்கு விமர்சனங்களை அவரது பாணியில் தெரிவிப்பார்.
அந்த வகையில், விடுதலை 2 திரைப்படத்திற்கும் அவர் விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு முதல் பாகத்தையும், இரண்டாவது பாகத்தையும் ஒப்பீடு செய்து விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். அவர் கூறுகையில், “விடுதலை பாகம் 1 நம்மால் மறக்க முடியாத ஒரு கதை. அதற்கு முக்கியமான காரணம் அந்த திரைப்படத்தின் கதையும், திரைக்கதையும் தான்.
முதல் பாகத்தில் இருந்த கதாபாத்திரங்கள் விடுதலை 2 பாகத்திலும் ரிப்பீட் ஆகிறது. ஆனால், அந்த கதாபாத்திரங்கள் எதுவுமே நம் மனதில் நிற்கவில்லை. பார்ட் 1 படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருந்த சூரி கூட இந்த திரைப்படத்தில் பத்தோடு 11 என்கின்ற வரிசையில் தான் இருக்கிறார். விஜய் சேதுபதி கேரக்டருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரமும் அவ்வளவு ஸ்ட்ராங்காக இல்லை.
சித்தாந்தங்கள் கருத்துக்களை கூறி நம் காதில் ரத்தம் வர வைத்து விட்டார். அப்பறம் போராடுறாரு போராடுறாரு போராடிகிட்டே இருக்காரு. அவர் எப்படி போராளியானார் என்பதை சொல்வதற்கு மட்டும் 50 காட்சிகள். பார்ட் 1 இல் அவர் போராளி என்பதற்கான எந்த ஒரு சீனும் இருக்காது. ஆனால், இத்திட்டத்தில் அவர் போராளி தான் என்பதை நிரூபிப்பதற்கு ரொம்ப போராடிவிட்டார்.
ஒரு நல்ல திரைகதை என்றால் அந்த திரை கதையில் ஒரு சீனை எடுத்துவிட்டால், கூட படம் முழுக்க அந்த ஜம்ப் தெரிய வேண்டும். அதேபோல், தேவையில்லாத காட்சிகள் இப்படத்தில் நிறைய இருக்கிறது. குறிப்பாக விஜய் சேதுபதி, மஞ்சுவாரியர் காட்சிகள் தேவையே இல்லாதது. அவர்களுக்கு பாட்டு வேற படம் முழுக்க இந்த காட்சிகளை வேஸ்ட் லக்கேஜ் போல தூக்கிக்கொண்டு சுற்றி வருகின்றனர். எம்ஜிஆர் காலத்து ஹீரோயின் கதை போல இருக்கிறது.
படம் போகப் போக போராட்டம் போராட்டம்னு ரொம்ப போராடிட்டாங்க. நம்ம அதைவிட அதிகமா போராடி இந்த படத்தை பார்க்க வேண்டியதா போச்சு. மொத்தத்தில் இந்த படம் எப்படி இருக்கு, அப்படி என்றால் எல்லாருமே வெற்றிமாறன் திரைப்படத்தை பார்த்திருப்போம். அவர் இயக்கிய படங்களிலேயே ஒரு சுமாரான படம் என்றால் அது இது தான்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : வயிற்றில் குழந்தை..!! தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை மூச்சுத்திணற வைத்து கொலை செய்த சித்தி..!!