fbpx

கள்ளக்காதலியை கைவிட சொன்ன மனைவி..!! உணவில் விஷம் வைத்து கொன்ற கொடூர கணவன்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் உள்ள முடிகெரே தாலுகாவில் உள்ள தேவவிர்ந்தாவை சேர்ந்தவர் தர்ஷன். கல்லூரியில் படிக்கும் போது ஸ்வேதா என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். தர்ஷன் மற்றும் ஸ்வேதாவுடன் சேர்ந்து, பெங்களூரு கொடிகேஹள்ளி அருகே ட்ரூ மெடிக்ஸ் லேப் நடத்தி வந்தனர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் கணவரை பிரிந்த பெண்ணுடன் தர்ஷன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இதற்கு ஸ்வேதா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணுடனான தொடர்பை கைவிடுவதாக தர்ஷன் கூறியுள்ளார். இருப்பினும், தர்ஷன் பல பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு தேவவிரிந்தா கிராமத்தில் உள்ள தர்ஷன் வீட்டிற்கு ஸ்வேதா (31) வந்தார். இந்நிலையில், நேற்று ஸ்வேதா திடீரென உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக தர்ஷன் கூறினார். மேலும் ஸ்வேதாவை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். எனினும், ஸ்வேதாவின் குடும்பத்தினர் தங்கள் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் ஸ்வேதாவின் உடலில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. விஷ ஊசி போட்டு அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, தர்ஷனை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது ராகி உருண்டையில் சயனைடு கலந்து ஸ்வேதாவை கொன்றதாக தர்ஷன் ஒப்புக்கொண்டார். மனைவியை கொலை செய்து நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

வெள்ள பாதிப்பு..!! அரசு ஊழியர்களுக்கு ரூ.6,000..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்..!!

Wed Dec 13 , 2023
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி பெரும் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, வெள்ள நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மத்திய-மாநில அரசு உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர் மற்றும் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்களும் நிவாரணத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு […]

You May Like