fbpx

கணவரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து ரீல்ஸ் போட்ட மனைவி..!! தலையில் ஒரே போடு..!! சாக்கு மூட்டையில் மதுமிதாவின் உடல்..!!

தெலங்கானா மாநிலம் உப்பல் பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் போலா. இவரது மனைவி மதுமிதா (24). இந்த தம்பதிக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது. ஒடிசாவில் வசித்து வரும் பிரதீப் போலா, தெலங்கானாவில் உள்ள ஓட்டலில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆர்வமுள்ள மதுமிதா இன்ஸ்டாவில் ரீல்ஸ் வீடியோ வெளியிடுவது வழக்கம். ஆனால், இது பிரதீப் போலாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தக்கூடாது, ரீல்ஸ் வீடியோ வெளியிடக்கூடாது என்று கண்டித்துள்ளார்.

ஆனால், கணவரின் பேச்சை கேட்காமல், மதுமிதா தொடர்ந்து ரீல்ஸ் வெளியிட்டு வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரதீப் போலா, கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுமிதாவை கத்தியால் தலையில் வெட்டிக்கொன்றார். பின்னர், அவரது உடலை துண்டுத்துண்டாக வெட்டி ஒரு சாக்கு மூட்டையில் கட்டியுள்ளார். அந்த மூட்டையை தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் வைத்துவிட்டு தனது குழந்தையுடன் தலைமறைவாகி விட்டார்.

இதற்கிடையே, ஓட்டலுக்கு வேலைக்கு வராததால், அங்கிருந்த சக ஊழியர்கள் பிரதீப் போலாவை தேடி அவரது வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அவர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது குளியல் அறையில் இருந்த சாக்குமூட்டையில் மதுமிதாவின் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சமையல்காரரை தேடி வந்தனர். இதற்கிடையே, தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read More : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!! காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி..!!

English Summary

Madhumita, who is keen on social media, regularly posts video reels on Instagram. But Pradeep Bola did not like this. Due to this, he condemned not to use the cell phone for a long time and not to release video reels.

Chella

Next Post

செக்!! சிம் கார்டுக்கு புதிய ரூல்ஸ்.. சிக்கினால் ரூ.2 லட்சம் அபராதம்!! உடனே உங்க ஆதார் கார்டை கையில் எடுங்க!

Tue Jul 16 , 2024
In todays digital age, its crucial to manage your mobile connections carefully to protect your privacy and security, especially with concerns about unauthorized SIM card issuance.

You May Like