உடலுறவு கொள்ள மறுத்த மனைவியை, கணவனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூரில் பகுதியில் வசித்து வருபவர் ஷங்கர் ராம். இவரது மனைவி ஆஷா பாய். இந்நிலையில், நேற்று ஷங்கர் குடிபோதையில், தன்னுடைய மனைவி ஆஷாவிடம் உடலுறவு கொள்ளுமாறு கூறியுள்ளார். இதற்கு ஆஷா மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே இந்த தம்பதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆஷா கிணற்றில் குதித்துள்ளார். இதையடுத்து, அவரது கணவரும் கிணற்றில் குதித்து அவரை காப்பாற்றினார். கிணற்றில் இருந்து வெளியே எடுத்தவுடன் அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதத்தில் மிகவும் கடுப்பான ஷங்கர் மனைவி என்று கூட பார்க்காமல் ஆஷாவின் அந்தரங்க உறுப்பை தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு இரவு முழுவதும் ஆஷாவின் உடல் அருகே அமர்ந்திருந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சங்கரை கைது செய்தனர். உடலுறவுக்கு ஒற்றுக்கொள்ளாத மனைவியை கணவனே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.