fbpx

டிரான்ஸ்பார்மரில் ஏறி அடாவடி செய்த மனைவி!… கள்ளக்காதலனுக்காக இப்படியா?… வைரலாகும் வீடியோ!

Uttar Pradesh: உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதலனை தனது வீட்டில் தங்க அனுமதிக்கக்கோரி பெண் ஒருவர் டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டம் ‘பிப்ரைச்’ என்ற ஊரைச் சேர்ந்தவர் ராம் கோவிந்த். கூலித்தொழிலாளியான இவரது மனைவி ஷில்பா (வயது 34). திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. ஷில்பாவுக்கு பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு இளைஞருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஷில்பாவும் அந்த இளைஞரும் கடந்த ஏழு ஆண்டுகளாக பழகி வந்துள்ளதாக தெரிகிறது. இந்த விவரம் அறிந்த கணவன் ராம் கோவிந்த் இது குறித்து தனது மனைவியிடம் விசாரித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆத்திரத்தில் தனது வீட்டு முன் உள்ள உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஷில்பா ஏறினார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கீழே இறங்குமாறு கூறினர். ஆனால், அவர் கீழே இறங்க மறுத்தார். இதுபற்றி தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி அந்த பெண்ணை உயிருடன் மீட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. மேலும், போலீஸ் விசாரணையில் மனைவி ஷில்பா தான் கள்ளத் தொடர்பு வைத்துள்ள நபரை தனது வீட்டில் தங்க வைக்க அனுமதிக்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விபரீத கோரிக்கைக்கு கணவன் ஒப்புக் கொள்ள மறுத்துள்ளார். இதன் காரணமாக அந்த பெண் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Readmore: கின்னஸ் சாதனை முதியவர் காலமானார்!… 11 குழந்தைகள், 41 பேரக் குழந்தைகள், 30 கொள்ளுப் பேரக் குழந்தைகள்!

Kokila

Next Post

மாஸ் உத்தரவு..!! உங்கள் பத்திரங்கள் நிலுவையில் உள்ளதா..? சார் பதிவாளர்கள் மீது பாயும் நடவடிக்கை..!!

Fri Apr 5 , 2024
உரிய காரணமின்றி, பத்திரங்களை நிலுவையில் வைக்கக்கூடாது என்று சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 10 முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். பத்திரங்களை பதிவு செய்யும் போது சில பத்திரங்களை சார் பதிவாளர் நிலுவையில் வைக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. சர்ச்சையான பத்திரங்கள், பட்டாவின் உண்மை தன்மை குறித்த சந்தேகம், இணைய வழியில் பட்டா குறித்த தகவல்களை அறிய முடியாத நிலை போன்ற பல்வேறு காரணங்களால் பத்திரங்கள் நிலுவையில் […]

You May Like