fbpx

கள்ளக்காதலனுக்காக கணவரை தீர்த்துக் கட்டிய மனைவி..!! உடலை தோண்டி எடுத்த போலீஸ்..!! மகளால் வெளிவந்த மாரடைப்பு நாடகம்..!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரமடைந்த மனைவி, தனது கணவரை கொலை செய்துவிட்டு மாரடைப்பால் இறந்துவிட்டதாக நாடகமாடியது வெளிச்சத்திற்கு வந்தது. பெலகாவி ஆஞ்சநேய நகரை சேர்ந்தவர் சந்தோஷ் பத்மன்னவர் (47). இவருடைய மனைவி உமா (42). இவர்களுக்கு சஞ்சனா (18) என்ற மகள் இருக்கிறார். இவர், பெங்களூருவில் தங்கி பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி சந்தோஷ் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தனது மகள் சஞ்சனா உள்பட உறவினர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, அவருக்கு இறுதிச் சடங்கை நடத்திய நிலையில் சஞ்சனாவுக்கு தனது தந்தை இறப்பில் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், தனது வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை பார்க்க சஞ்சனா முற்பட்டார். ஆனால், உமாவோ அவரை தடுத்தார். இது சஞ்சனாவுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தனது தாய்க்கு தெரியாமல் சிசிடிவி காட்சிகளை பார்க்க முயன்ற சஞ்சனாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அவரது தந்தை இறந்த நாளுக்கு முந்தைய நாள் முதல் அவரது தந்தை இறந்த நாள் வரையிலான சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் தனது தாய் மீது சஞ்சனாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனே போலீசில் புகாரளித்தார்.

அந்த புகாரின் பேரில் சந்தோஷின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது. இவருடைய பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையே, அக்கம் பக்கத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது உமா, யாருடனோ இரவு நேரத்தில் பைக்கில் உட்கார்ந்திருந்த காட்சிகள் பதிவாகியிருந்தது. இதைத் தொடர்ந்து உமாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். பிறகு அவரிடம் தீர விசாரித்த போது மங்களூரை சேர்ந்த ஷோபித் என்பவருடன் உமாவுக்கு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.

இது நாளடைவில் காதலாக மாறியது. இப்படியே கள்ளக்காதலை தொடர்ந்த நிலையில், இந்த விவகாரம் சந்தோஷிற்கு தெரியவந்தது. ஆத்திரமடைந்த அவர், “18 வயதில் ஒரு பெண் இருக்கிறாள். இதெல்லாம் வேண்டாம்” என அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அதை கேட்காமல் கள்ளக்காதலை தொடர்ந்ததால் சந்தோஷ் ஆத்திரமடைந்து உமாவை கடுமையாக கண்டித்துள்ளார்.

இதனால் எங்கே கள்ளக்காதலை தொடர முடியாமல் போய்விடுமோ என அஞ்சிய உமா, கள்ளக்காதலன் ஷோபித்துடன் இணைந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அக்டோபர் 8ஆம் தேதி, தனது கணவருக்கு தூக்க மாத்திரைகளை உமா கொடுத்துள்ளார். பிறகு அவர் தூங்கிக் கொண்டிருந்த போது ஷோபித்தையும் அவரது நண்பரையும் வீட்டிற்கு அழைத்தார் உமா. பிறகு மூவரும் சேர்ந்து தலையணையால் அமுக்கி சந்தோஷை கொன்றனர். அதில், அவர் இறந்ததை அடுத்து மாரடைப்பு நாடகத்தை உமா அரங்கேற்றியுள்ளார். தனது வீட்டு சிசிடிவி காட்சிகளை அவர் டெலிட் செய்தாலும், அக்கம் பக்கத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளால் வசமாக சிக்கியுள்ளனர்.

Read More : எடப்பாடியாருக்கு காத்துக்கிடந்த தொண்டர்கள்..!! ஆனால் காரில் இருந்து இறங்கியது யார் தெரியுமா..? செம ட்விஸ்ட்..!!

English Summary

Fearing that she will not be able to continue her forgery, Uma plans to kill her husband along with the forger Shopit.

Chella

Next Post

பெட்ஷீட்டுக்காக அக்காவிடம் சண்டை.. கோபத்தில் தங்கை எடுத்த விபரீத முடிவு..!! இதற்கெல்லாமா தற்கொலை?

Mon Oct 21 , 2024
Bengaluru girl, 19, dies by suicide after argument over bedsheet with elder sisterc

You May Like